இளம் வீரர்களையும் விட்டுவைக்காத “ஸ்லெஜ்ஜிங்” கலாச்சாரம்... கிரிக்கெட்டுக்கு நல்லதா..?

பொதுவாக இப்படி ’ஸ்லெஜ்ஜிங்’ என்ற பெயரில் எதிரணி வீரர்களை வம்பிழுத்து அதன்மூலம் அவர்களை மனரீதியாக பலவீனமடையச் செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இளம் வீரர்களையும் விட்டுவைக்காத “ஸ்லெஜ்ஜிங்” கலாச்சாரம்... கிரிக்கெட்டுக்கு நல்லதா..?
IndU19vsAusU19
  • Share this:
கிரிக்கெட் என்றாலே அது ஒரு ”ஜென்டில் மென்ஸ் கேம்” என்றழைக்கப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு விளையாட்டில் ‘ஸ்லெஜ்ஜிங்’ என்ற பெயரால் வீரர்கள் ஒருவரை ஒருவர் வம்பிழுப்பதும், அநாகரீகமான வார்த்தைகளால் திட்டுவதும், சில சமயங்களில் அத்துமீறுவதும் வழக்கமாகிவிட்டது. அதுவும் டி-20 போட்டிகளின் வருகைக்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

உதாரணத்திற்கு கடந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ’ரிஷப் பந்து’க்கும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான ’டிம்பெய்னுக்கும்’ இடையில் நடந்த ‘பேபி சிட்டிங்’ ஸ்லெஜ்ஜிங் மிகவும் பிரபலம். தற்போதும் இதுதொடர்பான பதிவுகளை நீங்கள் சமூகவலைதளங்களில் காணலாம்.

இவர்கள் இருவருமே அப்போது களத்தில் சற்றே ஆக்ரோஷமாக நடந்துகொண்டாலும், அதனை களத்துக்கு வெளியே பெரிதாக்காமல், பரஸ்பரம் நட்பு பாராட்டினர். குறிப்பாக பந்த் இந்த சம்பவத்துக்குப் பிறகு பெயினின் குடும்பத்தினரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகின.
இதுபோல் களத்தில் விளையாடும் வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்படுவது தேவையான ஒன்றே. ஆனால் அது எல்லைமீறும் போது விளையாட்டு என்பதை தாண்டி வினையாகிறது.

பொதுவாக இப்படி ’ஸ்லெஜ்ஜிங்’ என்ற பெயரில் எதிரணி வீரர்களை வம்பிழுத்து அதன்மூலம் அவர்களை மனரீதியாக பலவீனமடையச் செய்து அல்லது அவர்களின் கவனத்தை சிதற வைத்து, அட்டத்தின் போக்கை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்வதில் ஆஸ்திரேலியர்கள் வல்லவர்கள். அந்த அணியின் ஸ்டீவ் வாக் தொடங்கி ஸ்மீத் வரை பல வீரர்கள் தங்கள் ஆட்டத்திற்கு மட்டுமல்லாமல் இதற்கும் மிகவும் பிரபலம்.தற்போது இந்த கலாச்சாரம் அந்த அணியின், 19வயதுக்குட்பட்டோருக்கான இளம் வீரர்கள் அணி வரை பரவியுள்ளது. தற்போது நடந்துவரும் 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் அந்த அணியின் பேட்ஸ்மேனான டேவிஸ் இந்திய அணியின் பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகியுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டது கிரிக்கெட் ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read : சூப்பர் ஓவரின் கடைசி 2 பந்தில் 2 சிக்சர்கள் விளாசிய ஹிட்மேன்... வைரல் வீடியோ 

இந்தப்போட்டியில் தனது இரண்டாவது ஓவரை தியாகி வீசியபோது அதை எதிர்கொண்ட டேவிஸ் பந்தை தொடாமல் விட்டுவிட்டு பவுலரை பார்த்து தனது பேட்டை உயர்த்தி எதோ கூற, இதற்கு தியாகியும் முறைத்துப் பார்த்தபடி எதிர்வினையாற்ற களத்தில் சிறிது நேரம் பரபரப்புண்டானது.ஆனால் அடுத்த பந்திலேயே தியாகி பழிவாங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. காரணம் அடுத்த பந்தை அவர் வீசியபோது அதை எதிர்கொண்ட டேவிஸ் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆகையால் பிரச்சனை அதோடு ஒரு முடிவுக்கு வந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியும் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இருப்பினும் இதுபோன்ற கலாச்சாரம் இளம்வீரர்கள் வரை பரவுவது நல்லதல்ல. இவற்றைத் தடுக்க ஐசிசி விதிகள் மட்டும் போதாது. அணி நிர்வாகங்களும் தங்கள் அணிவீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களில் வளர்ந்துவரும் வீரர்கள் ஈடுபடுவதை கட்டுப்படுத்த முடியும் என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

விளையாட்டில் ஆக்ரோஷம் மட்டும் போதாது. அது ஆக்கப்பூர்வமாக அல்லாமல் சில நேரங்களில் அழிவாய்கூட முடியலாம். ஆகையால் கிரிக்கெட்டை தனது அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பிரபல மூத்த வீரர்கள் இதுபோன்ற விஷயங்களிலும் முன்னுதாரணமாக திகழ்ந்தால் அது ஆட்டத்தை மேலும் அழகாக்கும் என்பதே  அனைவரின் எண்ணமாக உள்ளது.
First published: January 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading