ஐபிஎல், ராஞ்சி உள்ளிட்ட போட்டிகளில் விளையாடிய கர்நாடகா கிரிக்கெட் வீரர்கள் 2 பேர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறும் TNPL போன்று கர்நாடகாவில் ப்ரிமீயர் லீக் டி20 போட்டிகள் நடைபெறும். இந்த தொடரில் மேட்ச் பிக்சிங்கில் சில கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இந்த புகாரை அடுத்து க்ரைம் பிரிவு போலீசார் விாசரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து இன்று காலை ஜி.எம்.கவுதம், அப்ரார் காஸி ஆகிய 2 கிரிக்கெட் வீரர்களை கைது செய்தனர். மேட்ச் பிக்சிங்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர்களை தவிர மற்ற வீரர்கள் யாரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார்களா என்றும் விசாரித்து வருகின்றனர்.
கவுதம் பெல்லாரி டஸ்கர் அணியின் கேப்டன், அப்ரார் விக்கெட் கீப்பர் ஆவார்கள். கர்நாடகா ப்ரிமீயர் லீக் இறுதிப் போட்டியில் மெதுவாக பேட்டிங் செய்ய 20 லட்சம் ரூபாய் பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்டட கவுதம், அப்ரார் இருவரும் ஐபிஎல், ராஞ்சி உள்ளிட்ட தொடர்களில் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.