ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டை போராடி டிரா செய்த பாகிஸ்தான்…

நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டை போராடி டிரா செய்த பாகிஸ்தான்…

போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே முடிந்தது.

போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே முடிந்தது.

15 ஓவர்களில் 138 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை நியூசிலாந்துக்கு பாகிஸ்தான் நிர்ணயித்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணி போராடி டிரா செய்தது. இந்த போட்டியில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் சற்று முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. அந்த வகையில் இந்த ஆட்டம் நியூசிலாந்துக்கு எதிராக அமைந்து விட்டது.  இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டை எதிர்கொண்டது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசம் 161 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்வதற்கு உதவினார். மற்றொரு வீரர் அகா சல்மான் அதிரடியாக விளையாடி 103 ரன்களை எடுத்தார்.

விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது, கேப்டன் பாபர் ஆசம் உடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தி இருந்தார். இவர் முதல் இன்னிங்சில் 86 ரன்களை சேர்த்தார். 130.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களை எடுத்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக லாதம் மற்றும் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லாதம் 113 ரன்களிலும், கான்வே 92 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் களமிறங்கிய வில்லியம்சன் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஐஷ் சோதி சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சோதி 65 ரன்களில் வெளியேற, சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 200 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் வில்லியம்சன் அடிக்கும் 5ஆவது இரட்டை சதம் இதுவாகும். 194.5 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 612 ரன்களை எடுத்தபோது டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து 2ஆவது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை எடுத்தது. இந்நிலையில் 5ஆம் நாள் ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்கள் இமாமுல்ஹக் 96, சர்ப்ராஸ் 53 சவுத் ஷகீல் 55, முகம்மது வாசிம் 43 ரன்கள் எடுத்தனர். 103.5 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தபோது டிக்ளேர் செய்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்… 2ஆம் இடத்தில் நீடிக்கும் இந்திய அணி…

இதனால், 15 ஓவர்களில் 138 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை பாகிஸ்தான் நிர்ணயித்தது. இதையடுத்து களத்தில் இறங்கிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் டி20 மேட்ச்சைப் போல் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.

ரிஷப் பந்த் உடல்நிலை குறித்து தாயாரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி…

தொடக்க வீரர் பிரேஸ் வெல்3 ரன்களில் வெளியேற அடுத்து இணைந்த டெவோன் கான்வே – டாம் லாதம் இணை அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.

7.3 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 61 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடித்துக கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

First published:

Tags: New Zealand, Pakistan cricket