உலகக்கோப்பை நாயகன் கபில் தேவுக்கு திடீர் மாரடடைப்பு... டெல்லி மருத்துவமனையில் அனுமதி

1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்ததது.

உலகக்கோப்பை நாயகன் கபில் தேவுக்கு திடீர் மாரடடைப்பு... டெல்லி மருத்துவமனையில் அனுமதி
கபில் தேவ்
  • Share this:
இந்திய அணிக்கு முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவுக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்க ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ். 61 வயதான இவருக்கு தீடிரென மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள மருத்துவமனயைில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இவரது உடல்நிலைய சீராக உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்ததது. இந்திய கிரிக்கெட் கபில் தேவின் சாதனைகள் நீங்காத இடத்தை பெற்றுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணிக்காக 16 வருடங்கள் விளையாடி உள்ள கபில் தேவ் 131 டெஸ்ட் மற்றும் 225 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். சிறந்த ஆல்-ரவுண்டரான கபில் தேவ் இந்திய அணியை சிறந்த முறையில் வழிநடத்தியும் உள்ளார்.













ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading