நான் அரசியலில் சேரப்போகிறேனா? வதந்திகளுக்கு ஒரு எல்லை இல்லையா?- கபில் தேவ் வேதனை
நான் அரசியலில் சேரப்போகிறேனா? வதந்திகளுக்கு ஒரு எல்லை இல்லையா?- கபில் தேவ் வேதனை
kapil dev
1983 உலகக்கோப்பை நாயகன் - கேப்டன் கபில் தேவ் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக சில ரவுண்டுகள் கடும் வதந்தி பரவியது. இதனையடுத்து ஏன் இப்படி வதந்தியைப் பரப்புகிறார்கள் என்று கபில் தேவ் மனம் வருந்தியுள்ளார்.
1983 உலகக்கோப்பை நாயகன் - கேப்டன் கபில் தேவ் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக சில ரவுண்டுகள் கடும் வதந்தி பரவியது. இதனையடுத்து ஏன் இப்படி வதந்தியைப் பரப்புகிறார்கள் என்று கபில் தேவ் மனம் வருந்தியுள்ளார்.
தன் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் அவர், “என்னைப்பற்றி செய்தியை இப்போதுதான் கிடைக்கப் பெற்றேன். அதாவது நான் அரசியலில் சேர்கிறேனாம். இது முற்றிலும் பொய், எனக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பு இல்லை.
மக்கள் ஏன் இப்படி பொய்ச்செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை, எனக்கு இது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. அப்படி ஒரு முக்கியமான அடியை நான் எடுத்து வைத்தால் அதை பொதுவாக வெளிப்படையாக அறிவித்து விட்டுத்தான் செய்வேன்.இதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.” என்று கபில் தேவ் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
புகழ்பெற்ற ஆல்ரவுண்டர் கபில் தேவ், ஆம் ஆத்மி கட்சியுடன் (ஏஏபி) கைகோர்க்கப் போவதாக பல செய்திகள் முன்னதாகவே வெளிவந்தன. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அவர் சந்தித்த படமும் முன்னதாக வெளியானது.
கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் சேர்வது ஒன்றும் புதிதல்ல, கீர்த்தி ஆசாத் முதல் நவ்ஜோத் சிங் சித்து, கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், மனோஜ் திவாரி என்று பட்டியல் கொஞ்சம் நீளம்தான்.
வதந்திகள் சில வேளைகளில் உண்மையாகக் கூட மாறலாம். ஆனால் ஒன்றுமே இல்லாததை கண் வைத்து, காது மூக்கு வைத்து உருவம் கொடுப்பது மோசமான ஒரு செயல் என்றே வந்தந்திகளை பற்றிச் சிந்திக்கும் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.