இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் ட்ரேட்மார்க் ஆன ‘நடராஜ்’ ஷாட்டை நடிகர் ரன்வீர் சிங் விளையாடிக் காட்டி கபிலின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
கபில் தேவின் பயோபிக்கான 83 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் கபில் தேவ் ஆக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்து வருகிறார். கபில் தேவின் வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் வரலாற்றைப் பதிவு செய்ய பெரும் பயிற்சி எடுத்து நடித்து வருகிறார் ரன்வீர் சிங்.

கபில் தேவின் நடராஜ் ஷாட்
கபிலின் ட்ரேட்மார்க் ஷாட் ஆன ‘நடராஜ்’ ஷாட்டை நடிகர் ரன்வீர் அற்புதமாக விளாசி கபில் தேவ் மட்டுமல்லாது பல ரசிகர்களின் பாராட்டையும் பெற்று வருகிறார். 83 திரைப்படம் இந்தியாவில் முதல் ஐசிசி உலகக்கோப்பை வெற்றியைப் பதிவு செய்வதாய் எடுக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் கபில் தேவின் மனைவி ரோமி தேவி ஆக நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
மேலும் பார்க்க: 30 ஆண்டுகால வரலாறு...சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.