இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு குறித்து கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. அதனை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் '83'. இந்த படம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் செய்தியார்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய இயக்குனர் கபீர் கான், இந்திய அணி முதல் உலககோப்பையை வென்ற பொழுதில் இருந்து திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று எனது மனதில் இருந்தது. சிறு வயதிலேயே கனவாக இருந்த தருணம் இன்று நிறைவேறியுள்ளது. மிகவும் பெருமையாக உள்ளது. இந்த திரைபடம் எடுக்கும் போது உன்மையாக சவாலாகத் தான் இருந்தது. ஆனால் இந்த அளவிற்கு நன்றாக அமைந்தமைக்கு காரணம் 1983 உலக கோப்பையை வென்ற நம் இந்திய அணி வீரர்களின் ஆசீர்வாதம் தான் என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேசுகையில், ஒரு கிரிக்கெட் வீரராக மிகவும் பிடித்த இடம் இது. நான் விளையாடிய காலத்தை விட தற்போது மிகவும் அழகாக உள்ளது சேப்பாக்கம் மைதானம். தற்போது உள்ள தலைமுறைகள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.அதை பற்றி கூற வார்த்தைகள் இல்லை எனக்கூறினார்.
மேலும் மகேந்திர சிங் ஓய்வு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு சாதனைகள் படைத்தவர் தோனி. அவர் ஓய்வு குறித்து அவரும் கிரிக்கெட் தேர்வுக்குழுவும் தான் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும் என்றார்.
இந்த திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி இந்தி, தெலுங்கு , தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது தெலுங்கில் நாகார்ஜூனா வும் தமிழில் கமல்ஹாசனும் இப்படத்தினை வெளியிட உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.