• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கான்பூர் டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய வம்சாவளி நியூசிலாந்து வீரர்

கான்பூர் டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய வம்சாவளி நியூசிலாந்து வீரர்

நியூசிலாந்து அணியின் இந்திய வீரர் அஜாஜ் படேல்.

நியூசிலாந்து அணியின் இந்திய வீரர் அஜாஜ் படேல்.

கான்பூர் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவிருக்கும் நிலையில் நியூசிலாந்து அணியில் இந்தியாவில் பிறந்த அஜாஜ் படேல் என்ற வீரர் சுழற்பந்து வீச்சாளராக களம் காண்கிறார்.

  • Share this:
    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இருபது ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

    நியூசிலாந்து அணி சார்பில் சுழற்பந்துவீச்சாளராக அஜாஸ் படேல் களமிறங்குகிறார். இவர் இந்தியாவில் பிறந்தவர் ஆவார். 33 வயதாகும் இவர் மும்பையைச் சேர்ந்தவர். இவருக்கு 8 வயதாக இருக்கும்போது இவர்கள் குடும்பம் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தது.

    இது தொடர்பாக கூறிய அஜாஜ் படேல், “இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது ஓர் சிறப்பான உணர்வாக உள்ளது. இந்தியாவில் நான் முன்பு பார்க்காத இடங்களை பார்க்கும்பாது அழகாக உள்ளது. இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் விளையாடும் போது அது எந்த அணிக்கும் சவாலானதாக தான் இருக்கும்.

    இந்திய மைதானங்கள் சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக இருக்கும். இதனால் நான் இந்திய அணிக்கு எதிராக எனது அதிகபட்ச பங்களிப்பை அணிக்காக அளிப்பேன்” என்ற அஜாஜ் படேல் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர்.

    Also Read: கான்பூர் டெஸ்ட்: இந்திய அணியின் 11 வீரர்கள் இவர்கள்தான்

    நியூசிலாந்து அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஜாஸ் படேல் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை இந்திய அணிக்கு எதிராக களம் புகும் நியூசிலாந்து முதல் டெஸ்ட் அணி வருமாறு:

    டாம் லேதம், வில் யங், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளெண்டல், கைல் ஜேமிசன் அல்லது சாண்ட்னர், டிம் சவுதீ, அஜாஜ் படேல், வில் சோமர்வில், நீல் வாக்னர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: