• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ‘நான்சென்ஸ்’ - இந்திய அணியை புகழ்ந்து அப்துல் ரசாக்கை கலாய்த்த தானிஷ் கனேரியா!

‘நான்சென்ஸ்’ - இந்திய அணியை புகழ்ந்து அப்துல் ரசாக்கை கலாய்த்த தானிஷ் கனேரியா!

Danish kaneria

Danish kaneria

உங்களின் (பாகிஸ்தான்) பேட்டிங்கின் நிலை என்ன? யாரால் மேட்ச்களை வெற்றி பெற செய்ய முடியும்? இங்கிலாந்தின் இரண்டாம் தர அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. அணியை உருவாக்குவதிலேயே பிரச்னை இருக்கிறது.

  • Share this:
பாகிஸ்தானை விட இந்திய அணி மேலான நிலையில் இருப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தானிஷ் கனேரியா, முன்னாள் வீரர் அப்துல் ரசாக்கின் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான அப்துல் ரசாக் சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை டி20 தொடர் மோதல் குறித்து பேசுகையில், அக்டோபர் 24ம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருக்கும் மோதலில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்களை விரைவாகவே வீழ்த்திவிட்டால் போதும் இந்திய அணியை பாகிஸ்தான் எளிதாக வீழ்த்திவிடலாம்” என கூறியிருந்தார். அப்துல் ரசாக்கின் இந்த கருத்து கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னரான தானிஷ் கனேரியாவும் பேசியிருக்கிறார்.

தானிஷ் கனேரியா, தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ள வீடியோ ஒன்றில் பேசும்போது, “இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து அப்துல் ரசாக் தெரிவித்திருக்கும் கருத்தை கேட்டு திகைத்துப் போனேன். இரு அணிகளையும் ஒப்பிடவே முடியாது.

Also Read: இந்தியாவில் அறிமுகமாகும் அமெரிக்க புகழ் 7-Eleven சங்கிலித்தொடர் கடைகள் – என்ன ஸ்பெஷல்?

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே ஒரு நிலையாக இல்லை. விராட் கோலி, ரோகித் சர்மாவை வெளியேற்றிவிட்டால் போதும் இந்திய அணியை வீழ்த்தி விடலாம் என கூறுகிறார் அப்துல் ரசாக். நான்சென்ஸ். எப்படி இந்திய அணியை நம்மால் எட்டிப்பிடிக்க முடியும்?. பாகிஸ்தானில் ஒரு அணியை உருவாக்கவே பல பிரச்னைகள் இருக்கிறது. உங்களின் (பாகிஸ்தான்) பேட்டிங்கின் நிலை என்ன? யாரால் மேட்ச்களை வெற்றி பெற செய்ய முடியும்? இங்கிலாந்தின் இரண்டாம் தர அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. அணியை உருவாக்குவதிலேயே பிரச்னை இருக்கிறது. நிலைமை இப்படியிருக்க எப்படி இப்படி ஒரு கருத்தை கூற முடிகிறது?

சர்வதேச தர வீரர், பாகிஸ்தானில் பெரிதும் மதிக்கப்படும் ஒருவரிடமிருந்து இது எதிர்பாராத கருத்து. பாகிஸ்தானை விட இந்திய அணி மேலானது. இந்திய அணி ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது. அவர்களிடம் (இந்தியா) சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். நீங்கள் இவர்களை அவுட் செய்துவிடுவீர்களா?” இவ்வாறு தானிஷ் கனேரியா அப்துல் ரசாக்கிற்கு கேள்விகளை முன் வைத்தார்.

Also Read:  ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்களின் பட்டியல்.. டாப் 10-ல் யார் யார்?

பும்ராவை பாராட்டி பேச்சு:

வசிம் அக்ரம், வக்கார் யூனிஸுக்கு பின் பும்ரா போல சிறந்த முறையில் யார்க்கர் வீசும் வீரரை நான் பாத்ததில்லை. பாகிஸ்தானில் பிறந்த எந்த ஒரு வீரரும் பும்ரா போல பந்து வீசுவதை பார்த்ததில்லை. பும்ராவின் பந்துவீச்சு அபாரமாக இருக்கிறது. பும்ராவுக்கு போட்டி போடும் வகையில் அவருக்கு பக்கத்தில் வைத்து பேசும் அளவுக்கு கூட பாகிஸ்தானில் வீரர் இல்லை என்று தானிஷ் கனேரியா கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: