Home /News /sports /

“இந்து என்பதால் சகவீரர்கள் என்னுடன் பேச விரும்பவில்லை“ - முன்னாள் பாக். வீரர் வேதனை

“இந்து என்பதால் சகவீரர்கள் என்னுடன் பேச விரும்பவில்லை“ - முன்னாள் பாக். வீரர் வேதனை

தான் இந்து என்பதால் தன்னுடன் பேச விரும்பாத வீரர்களின் பெயரை வெளியிட உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்த தனிஷ் கனேரியா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.

தனிஷ் கனோரியா 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 18 ஆட்டங்களில் 15 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில் 1000-க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், தனிஷ் கனேரியா இந்து என்பதால், அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட பாகிஸ்தான் வீரர்கள் விரும்பியதில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த கருத்து தெரிவித்த தனிஷ் கனேரியா, உண்மையை அக்தர் கூறியிருப்பதாகவும், தன்னுடன் பேச விரும்பாத வீரர்களின் பெயரை வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து பேச முன்பெல்லாம் தைரியம் இல்லாத நிலையில், தற்போது தன்னால் முடியும் என்றும் கனேரியா தெரிவித்துள்ளார்.
Published by:Vijay R
First published:

Tags: Cricket, Pakistan News in Tamil

அடுத்த செய்தி