NZ vs WI : கேன் வில்லியம்சனின் மாரத்தான் இன்னிங்ஸ்- அபார இரட்டைச் சதம் விளாசல்: 519 ரன்கள் குவித்த நியூஸிலாந்து
Newzealand vs West Indies | 411 பந்துகளில் வில்லியம்சன் 34 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 251 ரன்கள் எடுத்து ஜோசப் பந்தை புல் ஷாட் ஆடி மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

கேன் வில்லியம்சன்
- News18 Tamil
- Last Updated: December 4, 2020, 7:58 PM IST
ஹாமில்டனில் மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அபார இரட்டைச் சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது 3வது இரட்டைச் சதமாகும். நியூஸிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 519 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், முதலில் பேட் செய்வதைத் தவிர்க்கும் தற்காப்பு உத்தியாக முதலில் நியூஸிலாந்து அணியை பேட் செய்ய அழைத்து பெரும்தவறிழைத்தார். இதனால் நியூஸிலாந்து அணி 519 ரன்களைக் குவித்தது. கேன் வில்லியம்சன் 251 ரன்கள் எடுத்து, அதில் 34 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விளாசியுள்ளார். 251 ரன்களுக்கு கேன் வில்லியம்சன் 412 பந்துகளைச் சந்தித்தார்.
முதல் நாள் ஆட்டமான நேற்று நியூஸிலாந்து 243/2 என்று முடிக்க, கேன் வில்லியம்சன் 97 ரன்களுடனும் ராஸ் டெய்லர் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2ம் நாளான இன்று ஆட்டம் தொடங்கிய போது மூன்றாவது ஓவரில் தனது ட்ரேட் மார்க் பேக்ஃபுட் பஞ்ச் ஷாட் பவுண்டரி மூலம் வில்லியம்ன்சன் தனது 22வது சதத்தை எடுத்தார். இதன் மூலம் 411 பந்துகளில் வில்லியம்சன் 34 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 251 ரன்கள் எடுத்து ஜோசப் பந்தை புல் ஷாட் ஆடி மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார். இவர் ஆட்டமிழந்தவுடன் மே.இ.தீவுகள் வீரர்கள் அனைவரும் கரகோஷம் செய்து பாராட்டினர். ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்து அவரை பெவிலியன் அனுப்பினர். மிகப்பெரிய இன்னிங்ஸ். மாரத்தான் இன்னிங்ஸ் என்ற ரகத்தைச் சேர்ந்தது, கட்டுக்கோப்பின் உச்சம், தரத்தின் உச்சமான ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும் இது.
இன்று ராஸ் டெய்லர் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஷனன் கேப்ரியல் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். இடது கை வீரரான ஹென்றி நிகோல்ஸ் வெளியே சென்ற ரோச் பந்தை எட்ஜ் செய்து 2வது ஸ்லிப்பில் ஹோல்டரிடம் வெளியேறினார்.
டாம் பிளெண்டல் 63 பந்துகளில் ஆமை வேகம் காட்டி 14 ரன்கள் சேர்த்து கேப்ரியல் பந்தில் எல்.பி. ஆனார். டேரில் மிட்செல் 7 ரன்கள் எடுத்து கிமார் ரோச்சின் அற்புதமான ஸ்விங் பந்துக்கு ஹோல்டரிடம் 2வது ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.மே.இ.தீவுகள் தரப்பில் கிமார் ரோச் பிரமாதமாக வீசி 3 விக்கெட்டுகளையும் ஷனன் கேப்ரியல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இன்று இன்னமும் 21 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் மே.இ.தீவுகள் தன் முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது.
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், முதலில் பேட் செய்வதைத் தவிர்க்கும் தற்காப்பு உத்தியாக முதலில் நியூஸிலாந்து அணியை பேட் செய்ய அழைத்து பெரும்தவறிழைத்தார். இதனால் நியூஸிலாந்து அணி 519 ரன்களைக் குவித்தது. கேன் வில்லியம்சன் 251 ரன்கள் எடுத்து, அதில் 34 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விளாசியுள்ளார். 251 ரன்களுக்கு கேன் வில்லியம்சன் 412 பந்துகளைச் சந்தித்தார்.
முதல் நாள் ஆட்டமான நேற்று நியூஸிலாந்து 243/2 என்று முடிக்க, கேன் வில்லியம்சன் 97 ரன்களுடனும் ராஸ் டெய்லர் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2ம் நாளான இன்று ஆட்டம் தொடங்கிய போது மூன்றாவது ஓவரில் தனது ட்ரேட் மார்க் பேக்ஃபுட் பஞ்ச் ஷாட் பவுண்டரி மூலம் வில்லியம்ன்சன் தனது 22வது சதத்தை எடுத்தார்.