முதல் முறையாக நடத்தப்பட்ட உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. இதில் பிற அணிகளை பின்னுக்குதள்ளி முதல் இரண்டு இடங்களை பிடித்த கோலி தலைமையிலான இந்தியாவும், கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக ஐசிசி சாம்பியன் கோப்பை உச்சி முகர்ந்தது நியூசிலாந்து. இதன் மூலம் அந்த அணியின் பல ஆண்டுகால ஐசிசி கோப்பை கனவு நனவானது.
சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன், பவுண்டரி அடித்து வெற்றி ரன்னை அடித்த ராஸ் டெய்லருடன் வெற்றியை கொண்டாடாமல் எதிர் அணியின் கேப்டனான விராட் கோலியின் நெஞ்சில் சாய்ந்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் வெற்றிக் களிப்பில் இருந்து வெளியே வந்துள்ள கனே வில்லியம்சன் இறுதிப் போட்டியில் தான் ஏன் கோலியின் நெஞ்சில் தலை சாய்ந்தேன் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
Also Read: உணவு டெலிவரிக்காக சென்ற போது பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த கடைக்காரரின் மகன்!
கிரிக்கெட் தளமான கிரிக்பஸ்-க்கு கனே வில்லியம்சன் அளித்துள்ள பேட்டியில், “இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அந்த தருணம் மிகசிறந்தது. இந்தியாவுடன் எப்போது கிரிக்கெட் விளையாடினாலும் அது மிகவும் கடினமானதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். எங்களின் சிறந்த முயற்சியை தந்தாக வேண்டிய நெருக்கடி எங்களுக்கு ஏற்படவே செய்யும். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ராஸ் டெய்லருடன் கொண்டாடுவதற்கு பதிலாக கோலியின் நெஞ்சில் ஏன் சாய்ந்தேன் என கேட்கிறீர்கள்.
எனக்கும் விராட் கோலிக்குமான உறவு பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஏற்பட்டது. கிரிக்கெட்டையும் கடந்து ஒரு ஆழமான நட்பு எங்களுக்குள் இருக்கிறது. அது எங்கள் இருவருக்குமே தெரியும்.” என்றார் வில்லியம்சன்.
Also Read: விரைவில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: எத்தனை எம்.பிக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்?
மேலும், இரு அணிகளும் மிகவும் போட்டித்தன்மையுடன் இருந்தன, மிகவும் கடினமாக விளையாடின, விளையாட்டு மிகவும் நெருக்கமாக இருந்தது. இறுதி முடிவு உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறது என்று எனக்குத் தெரியும். போட்டி முழுவதும், அது கத்தியின் விளிம்பில் இருப்பது போல் உணர்ந்தேன். அது போன்ற ஒரு நீண்ட கடினமான போட்டிக்குப் பிறகு, இரு அணிகளுக்கும் ஒரு பாராட்டு இருக்கிறது. ஒரு அணி கோப்பையைப் பெறுகிறது, ஒரு அணிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கும் மற்றொரு அணிக்குஅதிர்ஷ்டம் கிடைக்காது.” என்றார் அவர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
2008ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் கோலியும், வில்லியம்சனும் எதிர் எதிர் முகாமில் விளையாடியிருக்கின்றனர். அத்தொடரின் செமி ஃபைனலில் நியூசிலாந்தை, கோலி தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அதிலும் விராட் கோலியின் பந்துவீச்சில் தான் வில்லியம்சன் அந்தப் போட்டியில் ஆட்டமிழந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Captain Virat Kohli, Cricket, ICC World Test Championship, Kane Williamson