• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • Champion New Zealand | Kane Williamson | இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும் மிகப்பெரிய நன்றி; கிரேட் டெஸ்ட் மேட்ச்: சாம்பியன் கேன் வில்லியம்சன்

Champion New Zealand | Kane Williamson | இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும் மிகப்பெரிய நன்றி; கிரேட் டெஸ்ட் மேட்ச்: சாம்பியன் கேன் வில்லியம்சன்

உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து.

உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து.

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றுவது ஒரு அபாரமான உணர்வை, சிறப்பான உணர்வை ஏற்படுத்துவதாகக் கூறினார் சாம்பியன் அணியின் சாம்பியன் கேப்டன் கேன் வில்லியம்சன்.

 • Share this:
  2000-ம் ஆண்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கோப்பையை வென்ற பிறகு இதுதான் நியூசிலாந்தின் ஐசிசி கோப்பையாகும் அதுவும் டெஸ்ட் உலக சாம்பியன் என்பது அனைத்தையும் விட சிறந்த சாதனையல்லவா, ஒருநாள் போட்டி ஒருநாளில் முடிவடைந்து விடுவது, ஆனால் தொடர்ச்சியாக 3-4 நாட்கள் ஆதிக்கம் செலுத்தி ‘வலுவான’ இந்திய அணியை வீழ்த்துவது என்றால் சாதாரண காரியமல்ல. அதற்கு முதலில் இந்த பைனலை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டும். கோலியும் ரவிசாஸ்திரியும் இது இன்னொரு போட்டி, கவலையில்லை, ஒன்றில் தோற்றால் அணி 4-5 ஆண்டுகளாக செய்த சாதனை கெட்டு விடாது என்று பழம்பெருமைகளைப் பேசி வந்தனர். இதனால் தோல்வியுற்றனர். ஒரு நல்ல கேப்டனுக்கு தோல்வி மனதை பாதிக்க வேண்டும் நெருட வேண்டும், இல்லையெனில் எண்ணெய் மழை பெய்தது போல் இருக்க வேண்டியதுதான்.

  நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய தினம் நேற்றைய தினமாகும்.

  இந்நிலையில் ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் கேன் வில்லியம்சன் கூறியதாவது:

  நிச்சயமாக இது ஒரு சிறப்பான உணர்வுதான். இரண்டு முறை கோப்பைக்கு நெருக்கமாக சென்று கைகூடாமல் கடைசியில் பெரிய கோப்பையை வெல்வது நிச்சயம் சிறப்பான ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

  இதையும் படிச்சுப் பாருங்க: World Champion New Zealand | சாதனைக்குத் தகுதியான அணி நியூசிலாந்துதான், கேன் வில்லியம்சனுக்கு மனமார்ந்த வாழ்த்து- விராட் கோலி பாராட்டு

  இறுதிப் போட்டியை வெல்வது தான் உச்சம் இல்லையா? முதலில் இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்திய அணி ஒரு பிரமாதமான அணி, எத்தனை பெரிய சவால் என்பதை நாங்கள் அறிவோம்.

  வெற்றி பெறுவதற்கான உணர்வை தொடர்ந்து தக்க வைத்தோம், கடைசியில் வென்றோம். இது ஒரு கிரேட் டெஸ்ட் மேட்ச். நான் நியூசிலாந்து கிரிக்கெட்டுடன் குறுகிய காலம் தான் இருந்து வருகிறேன், அதனால் இது ஸ்பெஷல் ஃபீலிங். எங்கள் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் என்ற பட்டம் பெறுகிறோம்.

  கடந்த 2 ஆண்டுகளில் 22 வீரர்கள் அணிக்காக ஆடியுள்ளனர், அவர்களின் பங்களிப்பு, உதவிப்பணியாளர்கள், பயிற்சியாளர்கள் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. பாதுகாப்பதற்குரிய சிறந்த தருணமாகும் இது.

  எங்களிடம் ஸ்டார்கள் இல்லை என்பது தெரியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விஷயங்களை நம்பித்தான் ஆடினோம், ஆனால் சவாலாகத் திகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த ஆட்டத்தில் எங்கள் பாணி ஆட்டத்துக்கான இதயமும், கடமை உணர்வும் எங்களிடம் இருந்தது.

  இந்த இந்திய அணி அனைத்து சூழ்நிலைகளிலும் எப்படி வலுவான அணி என்பதை அறிந்தேயிருந்தோம். பைனல் அதுவும் ஒரே பைனல் என்றால் கடினம்தான். அதற்கு நாங்கள் மரியாதை அளித்தோம். எந்த அணியின் கையும் ஓங்கியிருக்கவில்லை, கடைசி நாள் வந்தது இது ரசிகர்களுக்கு விருந்து.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முதல் இன்னிங்ஸில் பேட் செய்வது கடினம் என்பதால் இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தோம். கீழ் வரிசை பேட்டிங் முன்னிலை கொடுக்க அருமையாக ஆடினர். இந்த பிட்ச் மிகவும் ஸ்போர்ட்டிங்கான ஒரு பிட்ச். 4 நாட்கள்தான் நடந்தாலும் ரிசல்ட் வருகிறது. கொண்டாடும் தருணம், கிரேட் கேம் ஆஃப் கிரிக்கெட்.

  இவ்வாறு கூறினார் கேன் வில்லியம்சன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: