#CSKvSRH | சி.எஸ்.கே-வுக்கு ஜாக்பாட்... ஹைதராபாத்தின் முக்கிய வீரர் திடீர் விலகல்!

#SRH Star flies back home under unfortunate circumstances | ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பை புவனேஸ்வர் குமார் ஏற்றுக்கொள்கிறார். #CSKvSRH

#CSKvSRH | சி.எஸ்.கே-வுக்கு ஜாக்பாட்... ஹைதராபாத்தின் முக்கிய வீரர் திடீர் விலகல்!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. (BCCI)
  • News18
  • Last Updated: April 23, 2019, 5:33 PM IST
  • Share this:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இருந்து ஹைதராபாத்தின் முக்கிய வீரர் சொந்தக் காரணங்களுக்காக திடீரென விலகினார்.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர் வெற்றிகள் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், கடந்த 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், பட்டியலில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மறுபுறம், முன்னாள் சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே விளையாடுவார்கள் என்ற கணிக்கப்பட்ட நிலையில், முக்கியமான வீரரே சொந்தக் காரணங்களுக்காக திடீரென விலகியுள்ளார்.


Kane Williamson, SRH, IPL
கேன் வில்லியம்சன். (IPL)


அந்த அணியின் கேப்டன் கேன் வில்லிம்சனின் பாட்டி இயற்கை எய்திவிட்டதால், அவர் உடனே நியூசிலாந்து திரும்புகிறார். அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார்.

ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் இருக்கும் ஹைதராபாத் அணிக்கு வில்லியம்சன் இல்லாதது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக, முகமது நபி அல்லது ஷகிப் அல் ஹசன் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் கேப்டன் பொறுப்பை புவனேஸ்வர் குமார் ஏற்றுக்கொள்கிறார்.சென்னை அணியில் 2 முக்கிய மாற்றம்? தோனியின் அதிரடி திட்டம்!

தோனியைப் போல் வேறு யாரும் செய்ததில்லை: உலகக்கோப்பையை வென்ற கேப்டன் புகழாரம்!

மைதானமே இல்லாத ஊரில் இருந்து வரலாறு படைத்த கோமதி: கண்கலங்க வைக்கும் பின்னணி!

Also Watch...



அஸ்வினை வைத்து மான்கட் முறையில் விக்கெட் எடுக்கலாம் - கலாய்த்த ஸ்டெயின்










தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்