வேறெந்த கேப்டனுக்கும் கிடைக்காத மரியாதையை ரசிகர்களிடமிருந்து பெற்ற கேன் வில்லியம்சன்!

Yuvaraj V | news18
Updated: August 9, 2019, 6:11 PM IST
வேறெந்த கேப்டனுக்கும் கிடைக்காத மரியாதையை ரசிகர்களிடமிருந்து பெற்ற கேன் வில்லியம்சன்!
ரசிகர்கள் உடன் கேன் வில்லியம்சன்
Yuvaraj V | news18
Updated: August 9, 2019, 6:11 PM IST
கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்ற கேப்டனாக கேன் வில்லியம்சன் வலம் வருகிறார்.

நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் நேற்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். மற்ற வருடங்களை விட இந்த வருடம் அவருக்கு மறக்க முடியாததாகவே அமைந்தது.

சொந்த நாட்டு ரசிகர்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் சொல்வது வழக்கமான ஒன்று, ஆனால் இலங்கை ரசிகர்கள் கேன் வில்லியம்சன் பிறந்த நாளுக்கு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான பயிற்சியில் நியூசிலாந்து அணி வீரர்கள் ஈடுப்பட்டிருந்தனர்.

மைதானத்திற்கு கேக்குடன் வந்த இலங்கை ரசிகர்கள் கேன் வில்லியம்சன் பிறந்த நாளை அவருடன் கொண்டாடினர். இந்த புகைப்படத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில பகிர்ந்துள்ளது.உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தாலும் சிறந்த கேப்டனாக கேன் வில்லியம்சன் வெற்றி பெற்றார். உலகக் கோப்பை தொடருக்கு பின் நியுசிலாந்து அணி பங்குபெறும் தொடர் இதுவாகும்.Also Read : டி.என்.பி.எல் தொடரில் தகுதி சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள்!

Also Read : Fact Check : காஷ்மீரில் தோனிக்கு எதிராக கோஷமிடப்பட்டதா?

Also Read : ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக களமிறங்கும் புதிய அணி! ஐசிசி அதிரடி

Also Read : ஆஷஸ் தொடரில் அடுத்தடுத்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்!

Also Read : அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனைகள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர்

 
First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...