பாக். அணி மீது கடும் நடவடிக்கை தேவை: இம்ரான் கானை கேட்டுக் கொண்ட பிரபல வீரர்!

உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படாத பாகிஸ்தான் அணி மீது எந்தவிதமான கருணையும் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Web Desk | news18
Updated: June 21, 2019, 7:35 PM IST
பாக். அணி மீது கடும் நடவடிக்கை தேவை: இம்ரான் கானை கேட்டுக் கொண்ட பிரபல வீரர்!
கம்ரான் அக்மல்
Web Desk | news18
Updated: June 21, 2019, 7:35 PM IST
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து பாகிஸ்தான் அணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் வீரர் கம்ரான் அக்மால் அதிபர் இம்ரான் கானிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின் தோல்விக்குப் பின் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்பும் கிளம்பியது.

Also Watch : சோகிப் மாலிக், சானியா மிர்சாவுடன் இரவு பார்டி: பாக். வீரர்களை திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்!


இந்தியாவிற்கு எதிரான போட்டிக்கு முன் பாகிஸ்தான் வீரர்கள் ஷிஷா பாரில் டின்னர் சாப்பிட்டது, கேப்டன் சர்பராஸ் அஹமது பந்துவீச்சு தேர்வு செய்தது என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என சில அறிவுரைகளை வழங்கினார். இம்ரான் கான் அதிபர் மட்டுமல்ல, 1992-ல் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்ற போது அணியின் கேப்டனாக இருந்தவர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படாத பாகிஸ்தான் அணி மீது எந்தவிதமான கருணையும் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Loading...

மேலும் பாகிஸ்தான் அணி எந்த ஒரு போட்டியிலும் சிறப்பாக செயல்படவில்லை. இங்கிலாந்து அணியை மட்டும் தான் வென்றுள்ளது. சேஸிங் செய்வதில் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையை மேம்படுத்த வேண்டும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு அணிக்கு எதிரான போட்டியில் 105 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது, அணியின் ஒத்துமொத்த எதிர்பார்ப்பையும் சிதைத்துவிட்டது என்றார்.

Also Watch :தோல்வி அடைந்தாலும் புதிய சாதனை படைத்த வங்கதேசம்... முதல் இடத்திற்கு முன்னேறிய ஆஸி...!

Also Watch

First published: June 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...