தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் காலிஸ் அரை மீசை, தாடியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னா் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ். இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். ஐபில் தொடரில் கொல்கத்தா அணிக்காக 2008 முதல் 2014 வரை 98 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
காலிஸ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை மீசை, தாடியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் வாழும் காண்டாமிருங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வுக்காக அவர் தனது தோற்றத்தை இப்படி மாற்றி உள்ளார். மேலும் இதற்காக அவர் நிதி கொடுத்தும், திரட்டியும் வருகிறார்.
காலிஸின் இந்த முயற்சிக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாக காண்டமிருங்கள் இனம் அழிவை நோக்கி செல்வதால் அவற்றை பாதுகாக்க Save The Rhin என்ற விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. உலகில் 80 சதவீத காண்டமிருங்கள் தென்னாப்பிரிக்காவில் தான் உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.