• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தல தோனியின் சிஎஸ்கேயில் ஆடிய அனுபவத்தை ஹேசில்வுட் பகிர்ந்தார்- பிஞ்ச் வெளிப்படை

தல தோனியின் சிஎஸ்கேயில் ஆடிய அனுபவத்தை ஹேசில்வுட் பகிர்ந்தார்- பிஞ்ச் வெளிப்படை

ஆரோன் பிஞ்ச்

ஆரோன் பிஞ்ச்

ஐபிஎல் தொடரில் தல தோனியின் சிஎஸ்கே அணிக்காக ஆடிய ஹேசில்வுட் சிலபல பிரமாத பவுலிங்கை வீசி சிஎஸ்கே வெற்றியில் பெரும்பங்கு வகித்தவர் ஆவார், யுஏஇ பிட்களில் எப்படி வீசுவது எப்படி களவியூகம் அமைப்பது போன்ற ரகசியங்களை அவர் பகிர்ந்து கொண்டது உதவியதாக சாம்பியன் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஐபிஎல் தொடரில் தல தோனியின் சிஎஸ்கே அணிக்காக ஆடிய ஹேசில்வுட் சிலபல பிரமாத பவுலிங்கை வீசி சிஎஸ்கே வெற்றியில் பெரும்பங்கு வகித்தவர் ஆவார், யுஏஇ பிட்களில் எப்படி வீசுவது எப்படி களவியூகம் அமைப்பது போன்ற ரகசியங்களை அவர் பகிர்ந்து கொண்டது உதவியதாக சாம்பியன் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

    துபாயில் நேற்று நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. ஐபிஎல் போட்டிகளில் 2021 தொடரில் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை ஹேசில்வுட் கைப்பற்றியிருந்தார். உலகக்கோப்பை டி20யில் ஹேசில்வுட் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    இறுதிப் போட்டியில் ஹேசல்வுட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணியில் ஹேசல்வுட், ஆடம் ஸம்பா இருவர் மட்டுமே கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். மேக்ஸ்வெல் சில முக்கிய ஓவர்களை வீசினார், அதே போல்தான் ஸ்டார்க், ஆனால் நேற்று இவரை வில்லியம்சன் பிய்த்து உதறிவிட்டார்.

    இந்நிலையில் ஹேசில்வுட் பற்றி புகழ்ந்து கூறிய ஆரோன் பிஞ்ச், “எங்களின் பந்துவீச்சுக் குழுவில் ஹேசல்வுட் முக்கியமான நபர். சிஎஸ்கே அணியில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை எல்லாம் எங்களிடம் ஹேசல்வுட் பகிர்ந்துகொண்டார். அதிலும் குறிப்பாக இறுதிப் போட்டியில் எவ்வாறு பந்து வீசுவது, விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியம் என்பதை உணர்ந்து லைன் லென்த்தில் எவ்வாறு வீசுவது என்பதை எங்களிடம் ஹேசல்வுட் பகிர்ந்துகொண்டார்.

    உண்மையில் ஹேசில்வுட் பந்துவீச்சை அடிப்பது ஆட்டத்தில் கடினமாகத்தான் இருந்தது. எங்களிடம் பல அற்புதமான, முக்கியமான தகவல்களை ஹேசல்வுட் பகிர்ந்துகொண்டார். ஐபிஎல் தொடரில் ஹேசல்வுட் சிறப்பாகச் செயல்பட்டது எங்களுக்கு உலகக் கோப்பை போட்டியில் உதவியது.

    இதையும் படிக்கலாம்: 2021 டி20 உலகக்கோப்பை: டாப் 10 பேட்டர்கள், பவுலர்கள் லிஸ்ட்டில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை

    மிட்செல் மார்ஷ் பொதுவாக 4-வது வீரராக நடுவரிசையில்தான் களமிறங்குவார். ஆனால், சவாலாக 3-வது இடத்தில் இறங்குவதாகக் கேட்டார். வேகப்பந்துவீச்சைச் சிறப்பாக ஆடும் மார்ஷ் அந்தச் சவாலையும் சிறப்பாக எதிர்கொண்டார்”, என்றார் பிஞ்ச்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: