Home /News /sports /

ஸ்மித்தை ஏமாற்றி கீழே விழ வைத்த பேரிஸ்டோவ் - வீடியோ

ஸ்மித்தை ஏமாற்றி கீழே விழ வைத்த பேரிஸ்டோவ் - வீடியோ

ஆஷஸ் 2019

ஆஷஸ் 2019

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்தை ரன் அவுட் செய்வது போன்று ஏமாற்றி அவரை கீழே விழ வைத்தது ஆஸ்திரேலியா ரசிகர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய சவாலாக ஸ்மித் இருந்து வருகிறார். ஒரு இரட்டை சதம், 2 சதம் மற்றும் 2 அரைசதம் விளாசிய ஸ்மித் இந்த டெஸ்ட் போட்டியிலும் 80 ரன்கள் எடுத்து வோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார்.

இந்த போட்டியில் ஸ்மித் 2வது ரன் ஓடிவரும் போது விக்கெட் கீப்பராக இருந்த பேரிஸ்டோவ் பந்து வரமாலே ரன்அவுட் செய்வது போலியாக ஏமாற்றுவார். இதை சற்றும் எதிர்பாராத ஸ்மித் விழுந்து அடித்து கிரிஸ்க்குள் செல்வார். அதன்பின் பந்து வரவே இல்லை என்பதை உணர்ந்தார்.


பேரிஸ்டோவ் எதற்காக இப்படி செய்தார் என்று தெரியாவிட்டாலும் ஸ்மித்திற்கு காயம் ஏற்பட வேண்டுமென்பதாலே அவர் இப்படி செய்தார் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 294 ரன்களுக்கும் ஆஸ்திரேலியா 225 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து இங்கிலாந்து அணி 2 இன்னிங்சை பொறுமையாக விளையாடி வருகிறது.

Also Watch : பிகில் பாடலும் காப்பியா?

Published by:Vijay R
First published:

Tags: Ashes

அடுத்த செய்தி