ஐபிஎல் தொடரிலிருந்து இங்கிலாந்தின் 3 முக்கிய வீரர்கள் திடீர் விலகல்

இங்கிலாந்து அணி

IPL 2021 | UAE | இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலக வேண்டுமென குரல்கள் ஒலிக்க தொடங்கியது.

 • Share this:
  ஐபிஎல் 2021 தொடர் ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ள நிலையில் இங்கிலாந்தின் 3 முக்கிய வீரர்கள் விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் தொடர் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருப்பதற்காக டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் ஐபிஎல் தொடர் காரணமாகவே டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்ட்டதாக இங்கிலாந்து தரப்பில் விமர்சனம் எழுந்தது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலக வேண்டுமென குரல்கள் ஒலிக்க தொடங்கியது.

  இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ, பஞ்சாப் கிங்ஸ் வீரர் டேவிட் மலான், டெல்லி கேபிடல்ஸ் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணமாக பிசிசிஐ அறிவித்துள்ள பயோ-பபுள் விதிமுறை தான் என்று கூறப்படுகிறது.

  Also Read : மனைவியை பிரிந்த 24 மணி நேரத்தில் ஷிகார் தவானுக்கு அடுத்த சோகம்

  இங்கிலாந்தில் வரும் வீரர்கள் கட்டாய 6 நாட்கள் தனிமைப்படுத்தல் இருந்து கொரோனா தொற்று இல்லை என்றால் மட்டுமே பயோ-பபுள் சூழலுக்கு செல்ல முடியும். இதன் காரணமாக கூட இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: