SA20 போட்டியில் நேற்று இரவு நடந்த அதிரடியான விளையாட்டில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி போட்டியை வென்றது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் இழந்து வெறும் 27 ரன்கள் இருக்கையில், அந்த அணியை சேர்ந்த டோனோவன் ஃபெரீரா 40 பந்துகளில் 82 ரன்களை சேர்த்து அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை 190/6 என்ற வெற்றி இலக்கிற்கு அழைத்துச் சென்றார்.
கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் 50 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் கைப்பற்றப்பட்ட ஃபெரீரா, இதுவரை 27 டி20 போட்டிகளில் விளையாடி 621 ரன்களை குவித்துள்ளார். ஃபெரீராவின் ஆட்டத்தை பற்றி பேசிய வயகாம் 18 விளையாட்டு நிபுணர் ஜாகீர் கான், “அணியின் இப்படிப்பட்ட ஒரு நெருக்கமான சூழலை எதிர்கொள்வது எளிதல்ல. ஃபெரீரா உண்மையில் எதிரணியுடன் நேர்த்தியாக விளையாடி விளையாட்டை முற்றிலும் மாற்று திசைக்கு திருப்பி எதிரணியை அதிர செய்தார். பேட்டிங்கின் போது மட்டுமின்றி ஃபௌளிங்கிலும் ஃபெரீரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் விளையாடிய பல ஷாட்கள் சக்தி வாய்ந்தவையாகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இருந்தன.
ஃபெரீரா போன்ற சிறப்பான வீரரை வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு பெரிய பலம். குறிப்பாக ஃபெரீராவினால் ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள்.கேட்ச் ஒன்றை அவர் தவர விட்டிருந்தாலும் பல வகைகளில் உறுதுணையாக இருந்து நன்றாக களத்தில் விளையாடிய ஒரு சிறந்த வீரர் ஆவார்.இது மட்டுமின்றி அவர் ஒரு சிறந்த கீப்பர், பந்துவீச்சாளர் மற்றும் ஸ்பின்னராகவும் நன்றாக விளையாடுகிறார். இது மட்டுமின்றி அவர் பெரிய ஷாட்களை விளையாடி அசத்தி உள்ளார் . மேலும் (ரொமாரியோ) ஷெப்பர்டுடன் சேர்ந்து விளையாடியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் இன்று இரவு 9:00 மணிக்கு பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியுடன் விளையாடுகிறது, இந்த போட்டியை Colors Tamil JioCinema, Sports18 – 1, மற்றும் Sports18 Khel இல் நேரலையில் காணலாம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், IPL 2023, Rajasthan Royals