ஐ.பி.எல் தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் விலகல்..!

ஐ.பி.எல் தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் விலகல்..!
ஆர்சர்
  • Share this:
இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜோப்ரா ஆர்சர் காயம் காரணமாக நடக்கவிருக்கும்  ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயதான இளம் ஆல்ரவுண்டர் ஜோப்ரா ஆர்சர். இவர் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது  வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரின் பாதியில் இங்கிலாந்து திரும்பினார்.

ஆர்சருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு வலது முழங்கையில் லேசான எலும்பு முறிவு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகி உள்ளார்.


ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் இவர் கடந்த சீசனில் 21 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இங்கிலாந்தில் தனது காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் ஆர்சர் விரைவில் அதிலிருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்புவார் என்றும், வரும் ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற உள்ள போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜாப்ரா ஆர்சருக்கான மாற்று வீரரை உடனடியாக தேடவேண்டியதில்லை. அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்