HOME»NEWS»SPORTS»cricket joe roots fourth test 200 aru

வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் புதிய சாதனை!

அலயஸ்டர் குக்கின் சாதனையை தகர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை படைத்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்!

வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் புதிய சாதனை!
அலயஸ்டர் குக்கின் சாதனையை தகர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை படைத்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்!
  • Share this:

இரண்டு இரட்டை சதங்கள் அடித்த முதல் இங்கிலாந்து கேப்டன் என்ற சாதனையை இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் படைத்திருக்கிறார் ஜோ ரூட்.

இலங்கையின் காலே மைதானத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 14ம் தேதி தொடங்கியது. தினேஷ் சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கி ஆடிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டின் அதிவேக ஆட்டத்தின் துணையுடன் 421 ரன்கள் திரட்டியது.

இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது 4வது இரட்டை சதம் அடித்தார். மேலும் இரண்டு இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து கேப்டன் என்ற அரிய பெருமையும் ஜோ ரூட் பெற்றார்.



தற்போது ஆடிவரும் வீரர்களில் விராட் கோலிக்கு (7 இரட்டை சதம்) அடுத்த இடத்தில் ஜோ ரூட் உள்ளார். அவரை போலவே, கனே வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோரும் 4 இரட்டை சதங்கள் விளாசியிருக்கின்றனர்.

ஜோ ரூட் இன்று படைத்த சாதனைகள்:

இன்றைய போட்டியின் போது 178 இன்னிங்சில் ஜோ ரூட் 8,000 ரன்களை கடந்துள்ளார். குறைந்த இன்னிங்ஸ்களில் 8,000 ரன்களை கடந்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் கெவின் பீட்டர்சன் (176) முதலிடத்தில் உள்ளார்.

இது வரை 7 இங்கிலாந்து வீரர்கள் டெஸ்டில் 8,000 ரன்களை கடந்துள்ளனர். இவர்களில் ஜோ ரூட்டின் 49.09 சராசரி தான் சிறந்தது. இந்த வகையில் அலெக் ஸ்டீவர்ட் (39.54) கடைசி இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வரும் இலங்கை அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியை விட 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கை தோல்வியை தடுக்கும் முனைப்பில் எஞ்சிய 2 நாள் ஆட்டத்தை நகர்த்துமா என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Arun
First published: