முகப்பு /செய்தி /விளையாட்டு / Joe Root Resigns- வேதனையுடன் விடைபெற்ற ஜோ ரூட்- கேப்டன்சியை உதறினார்

Joe Root Resigns- வேதனையுடன் விடைபெற்ற ஜோ ரூட்- கேப்டன்சியை உதறினார்

ஜோ ரூட்

ஜோ ரூட்

டெஸ்ட் அரங்கில் படுதோல்விகள் காரணமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார், இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது, இங்கிலாந்துக்கு புதிய கேப்டன் இனி அறிவிக்கப்படுவார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டெஸ்ட் அரங்கில் படுதோல்விகள் காரணமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார், இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது, இங்கிலாந்துக்கு புதிய கேப்டன் இனி அறிவிக்கப்படுவார்.

ரூட் ஐந்தாண்டுகளாக இங்கிலாந்து கேப்டனாக உள்ளார் மேலும் மற்ற இங்கிலாந்து கேப்டனை விட அதிக ஆட்டங்கள் (64), வெற்றிகள் (27) மற்றும் தோல்விகளை (26) அவர் சந்தித்துள்ளார். ஆனால் அவரது அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக மே.இ.தீவுகளில் வெற்றி வாய்ப்பைக் கோட்டை விட்டதோடு கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது இங்கிலாந்தில் கடும் சலசலப்புகளை உருவாக்கின. பின், வெஸ்ட் இண்டீஸுடன் தோற்றால் யாருக்குத்தான் கோபம் வராது?

இந்த அணியை வழிநடத்த தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுப்பேன் என்று ஜோ ரூட் சொன்னாலும் போதும் நிப்பாட்டு என்று மூத்த வீரர்கள், இங்கிலாந்து ரசிகர்கள் கூறிவிட்டனர்.

ஜோ ரூட் இது பற்றிக் கூறும்போது, “கரீபியன் சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பியதும், சிந்திக்க நேரம் கிடைத்ததும், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இது எனது வாழ்க்கையில் நான் எடுக்க வேண்டிய மிகவும் சவாலான முடிவு, ஆனால் எனது குடும்பத்தினருடனும் எனக்கு நெருக்கமானவர்களுடனும் இதைப் பற்றி விவாதித்த பிறகு, இதுவே சரியான நேரம் என்ற முடிவுக்கு வந்து ராஜினாமா செய்தேன். ” என்றார் ஜோ ரூட்

மேலும், "எனது நாட்டிற்கு கேப்டனாக இருந்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் கடந்த ஐந்து வருடங்களை மகத்தான பெருமையுடன் திரும்பிப் பார்க்கிறேன். அந்தப் பணியைச் செய்ததற்கும், இங்கிலாந்து கிரிக்கெட்டின் உச்சம் என்ன என்பதற்கு பாதுகாவலராக இருந்ததற்கும் பெருமைப்படுகிறேன்.

நான் எனது நாட்டை வழிநடத்த விரும்பினேன், ஆனால் சமீபத்தில் அது எனக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது மற்றும் விளையாட்டிற்கு வெளியே என்மீது இது

ஏற்படுத்திய தாக்கம் பெரிது.

சர்வதேச கிரிக்கெட்டில் தான் தொடர்ந்து விளையாடுவேன் என்பதை ரூட் உறுதிப்படுத்தினார் மேலும் "தொடர்வதில் உற்சாகமாக இருப்பதாகவும்...அணியை வெற்றிபெறச் செய்யும் செயல்திறன்களை உருவாக்குவதாகவும்" கூறினார். அவர் மேலும் கூறியதாவது: "அடுத்த கேப்டன், எனது அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு என்னால் இயன்ற விதத்தில் உதவ ஆவலுடன் காத்திருக்கிறேன். என்றார் ஜோ ரூட்.

குக் ராஜினாமா செய்த பிறகு ரூட் 2017 இல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2018ல் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராகவும், 2019-20ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் வெற்றிகளும் அவரது பதவிக்காலத்தின் சிறப்பம்சங்கள், அதே சமயம் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து 4-0 தொடர் தோல்விகள் மற்றும் கடந்த கோடையில் நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்விகள் மோசமான தருணங்களில் அடங்கும்.

First published:

Tags: England, Joe Root