நூறாவது போட்டியில் சதம்... சென்னை டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சாதனை

ஜோ ரூட்

India vs England | சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் தனது 100-வது சதமடித்தார். 100-வது போட்டியில் சதம் அடிக்கும் 9-வது வீரர் இவர்.

 • Share this:
  சென்னையில் தனது 100-வது டெஸட்டில் விளையாடும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் 100-வது போட்டியில் சதமடித்த 9-வது வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார்.

  இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் சென்னை மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்ததது.

  இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை நிதனாமாக எதிர்கொண்டது. இங்கிலாந்து வீரர்களை அவுட்டாக்க முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை 24-வது ஓவரில் தான் இந்திய அணி வீழ்த்தியது. ரோரி பார்ன்ஸ் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவீசந்திரன் அஸ்வின் சுழலில் சிக்கி வெளியேறினார். அடுத்த வந்த டேனியல் லாரன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.

  அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் 4-வது வீரராக களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்ட்ன ஜோ ரூட் மற்றொரு தொடக்க வீரரான டோமினிக் உடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடியை பிரிக்க எவ்வளவு முயன்றும் இந்திய பந்துவீச்சாளர்களின் முயற்சி வீணானது.

  சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் தனது 100-வது சதமடித்தார். 100-வது போட்டியில் சதம் அடிக்கும் 9-வது வீரர் இவர்.

  100-வது போட்டியில் சதமடித்த வீரர்கள்

  கொலின் கவுட்ரி
  ஜாவேத் மியாண்டாத்
  கார்டன் கிரீனிட்ஜ்
  அலெக் ஸ்டீவர்ட்
  இன்சமாம்-உல்-ஹக்
  ரிக்கி பாண்டிங்
  கிரேம் ஸ்மித்
  ஹாஷிம் அம்லா
  ஜோ ரூட்

  மேலும் ஜோ ரூட் 98, 99 மற்றும் 100 வது ஆகிய மூன்று போட்டிகளில் சதம் விளாசிய ஒரே வீரர் ஜோ ரூட் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: