இலங்கைக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் காயமடைந்த சஞ்சு சாம்சன், அந்த அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் பந்துவீச்சாளர் ஷிவம் மாவி சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். இதில் அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் பெற்றுள்ளார். பேட்ஸ்மேன்களில் தீபக் ஹூடா 41, அக்சர் படேல் 31 ரன்கள் எடுத்தனர்.அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முக்கியமான நெருக்கடியில் களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய தீபக் ஹூடா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியின் போது பீல்டிங் செய்த இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், இலங்கைக்கு எதிராக புனேவில் இன்று நடைபெற உள்ள இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்கேன் எடுப்பதற்காக சாம்சன் மும்பையிலேயே இருப்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று நடைபெறும் 2-வது டி20 போட்டியில் காயமடைந்த சஞ்சு சாம்சன்க்கு பதிலாக ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டி புனே மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ind vs SL, Sanju Samson, Sri Lanka