இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி புதன்கிழமை (மார்ச் 16) அன்று இங்கிலாந்துக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பெண் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாறு படைத்தார். இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் டாமி பியூமொன்ட்டின் விக்கெட்டை ஜூலன் கைப்பற்றினார்.
பட்டியலில் ஜூலனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் 180 விக்கெட்டுகளுடனும் மேற்கிந்தியத் தீவுகளின் அனிசா முகமது 180 விக்கெட்டுகளுடனும் இரண்டாவது இடத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில் மற்றும் இங்கிலாந்தின் கேத்ரின் ப்ரண்ட் முறையே 168 மற்றும் 164 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
முன்னதாக போட்டியின் போது, ஜூலன், ஆஸ்திரேலியாவின் லின் ஃபுல்ஸ்டனைத் தாண்டி, மகளிர் உலகக் கோப்பையில் 40 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஏமாற்றம் அளித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி 112 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பே ஓவலில் நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 இன் கட்டாயம் வெல்ல வேண்டிய லீக் ஆட்டத்தில் இந்தியா 134 ரன்களுக்கு சுருண்டதால், சார்லி டீன் 50 ஓவர் வடிவத்தில் 4/23 என்ற வாழ்க்கைச் சிறந்த பவுலிங்கை வீசினார். வறண்டதாகக் காணப்பட்ட புதிய ஆடுகளத்தில் முதலில் பந்துவீச கேப்டன் ஹீதர் நைட் எடுத்த முடிவு, இந்தியாவின் டாப் மற்றும் மிடில் ஆர்டர் சொதப்பலால் நல்ல முடிவானது. நடப்பு சாம்பியன்கள் ஃபுல் லெந்தில் பந்துவீசி, நன்றாக பீல்டிங் செய்து, கேட்சுகளை எடுத்து, ரன் அவுட்களுடன் அபாரமாக ஆடினர்.
மிட் ஆன் மற்றும் மிட்-விக்கெட் இடையேயான இடைவெளியில் கேத்ரீன் ப்ரண்ட் பந்தில் இந்திய வீராங்கனை யாஸ்திகா பாட்டியா முதல் பவுண்டரியை அடித்தார். ஆனால் ஆன்யா ஷ்ருப்சோல் (20 ரன்களுக்கு இரண்டு) இங்கிலாந்துக்கு முதல் திருப்புமுனையை அளித்தார், பாடியா ஷ்ருப்சோலின் 100வது விக்கெட்டானார் பாட்டியா.
ஸ்மிருதி மந்தனா ஒரு ஃப்ரீ-ஃப்ளோயிங் டிரைவ் மற்றும் விரைவான ஷார்ட் ஆர்ம் ஜாப் மூலம் 2 பவுண்டரிகளை அடித்தார். . ஆனால் இங்கிலாந்து, இந்தியாவிற்கு தொடர்ந்து அடிகளை கொடுத்தது. மிதாலி ராஜின் பார்ம் இன்மை தொடர்ந்தது. அவர் நேராக கவர்-பாயிண்டிற்கு ஸ்லைஸ் செய்து கேட்ச் ஆனார். பவர்-பிளேயில் ஷ்ரப்சோலுக்கு இரண்டாவது விக்கெட்டைக் கொடுத்தார்.
டாட் பால்களின் அழுத்தம் தீப்தி ஷர்மாவை முதல் ரன்னை எடுக்க சிரமப்படுத்தியது. இதன் விளைவாக அவர் நேராக மிட்-ஆஃப்பில் தட்டி விட்டு இல்லாத சிங்கிளுக்கு ஓடினார் ரன் அவுட் ஆனார். 10 பந்து ஆடி டக் அவுட் ஆனார்.
நான்காவது விக்கெட்டுக்கு 50 பந்துகளில் 33 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்து இந்திய அணியை சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர். ஆனால் 17 வது ஓவரில் டீனின் நுழைவு நிலைமையை மாற்றியது, ஆஃப்-ஸ்பின்னர் ஹர்மன்பிரீத் மற்றும் சினே ராணாவை இரட்டை விக்கெட் மெய்டன் ஓவரில் வெளியேற்றினார்.
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தோற்றதில் ஒரே ஆறுதல் ஜூலன் கோஸ்வாமி 250 ஒருநாள் விக்கெட்டுகளுடன் வரலாறு படைத்ததே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ICC world cup