இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான ஜெமிமா போட்டிக்கு முன்பே பெண் பாதுகாவலர் ஒருவரோடு நடனமாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் சமீபத்தில் நியூசிலாந்துக்கெதிராக நடைபெற்ற லீக் போட்டியில் த்ரில் வெற்றி பெற்று முதல் அணியாக அரை இறுதியில் நுழைந்துள்ளது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் ‘மிடில் ஆர்டர்’ வீராங்கணையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் பெண் பாதுகாவலருடன் இணைந்து ஒரு இந்தி பாடலுக்கு ஜாலியாக நடனம் ஆடியுள்ளார். இயல்பிலேயே மிகவும் துடிப்பனவரான ஜெமிமாவின் இந்த நடன வீடியோவை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,”யெஸ் ஜெமிமா ரோட்ரிக்ஸ்” என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளது. இருவரின் நடன அசைவுகளும் ரசிக்கும்படியாக உள்ளதால் தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதுவரை இந்த வீடியோ 50 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் பார்த்துள்ளனர். இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அஸ்வினும் இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு,’சூப்பர்’ என்று கமெண்ட் அடித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.