ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சென்னை அணியில் இருந்து ஜடேஜா விலகும் முடிவுக்கு செக் வைத்த தோனி? சிஎஸ்கே-வில் இருந்து விடுவிக்கபோகும் வீரர்கள் யார் யார் தெரியுமா?

சென்னை அணியில் இருந்து ஜடேஜா விலகும் முடிவுக்கு செக் வைத்த தோனி? சிஎஸ்கே-வில் இருந்து விடுவிக்கபோகும் வீரர்கள் யார் யார் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

ஜடேஜாவை விடுவிக்க வேண்டாம் என அணி நிர்வாகத்திடம் தோனி கூறியுள்ளதாகவும் வெளிநாட்டு வீரர்கள் இரண்டு பேரை அணியில் இருந்து விடுவிக்க சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

  கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர் தோல்வி காரணமாக அந்த தொடரில் இருந்து சென்னை அணி இரண்டாவது முறையாக பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

  இதனையடுத்து தொடரின் பாதியில் சென்னை அணிக்கு கேப்டனாக மீண்டும் தோனியே நியமிக்கப்பட்டார். இதனால் சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்தான் காயம் காரணமாக தொடரில் இருந்து அவர் விலகியதாக தகவல் வெளியானது.

  இதனைத் தொடர்ந்து ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை சென்னை அணி நிர்வாகம் நிறுத்திவிட்டதாக தகவல் வெளியானது. அதற்கேற்றார்போல் சென்னை அணியுடன் தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய ஜடேஜா வரும் சீசனில் வேறு அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்தன. இதனால் ரெய்னா போல இவரும் அணியில் இருந்து வெளியேற்றப்படுகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

  இதையும் படிங்க: டி20-யில் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேன் - மாஸ் காட்டும் சூர்ய குமார் யாதவ்..!

  2023 சீசனுக்காக மினி ஏலத்தை வரும் டிசம்பர் 16ஆம் தேதியன்று நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. அதற்கு முன்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் வெளியிட விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் தேவைப்படும் வீரர்களை மற்ற அணிகளுடன் பேசி வாங்குவதற்கான ட்ரேடிங் விண்டோ முறையை ஐபிஎல் நிர்வாகம் ஆரம்பித்துள்ளது.

  அதில் 2023 சீசனில் தங்களது அணிக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாட ரவீந்திர ஜடேஜாவை கொடுக்குமாறு டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் கோரிக்கை வைத்ததாகவும், சென்னை அணி ஜடேஜாவை கொடுத்துவிட்டு டெல்லி அணியில் உள்ள ஷர்துல் தாகூர் மற்றும் அக்சர் பட்டேல் உள்ளிட்ட இருவரை சென்னை அணிக்கு இழுக்க  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஒரு தகவல் இணையத்தில் பரவியது.

  இந்த நிலையில் ஜடேஜாவை சென்னை அணியில் இருந்து விடுவிக்க அந்த அணி நிர்வாகம் விரும்பவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தோனி சென்னை அணி நிர்வாகத்திடம் ஜடேஜாவை அணியில் இருந்து விடுவித்தால் அவருக்கு மாற்று வீரர் கிடைப்பது கடினம் என்றும் அவரின் இடத்தை யாராலும் சென்னை அணியில் நிரப்ப முடியாது என  எடுத்துரைத்து சமதானம் செய்துள்ளார்.

  ஜடேஜா போன்ற ஒரு ஆல்ரவுண்டர் அணிக்கு மிகவும் முக்கியம் என்பதால், அவரை விடுவிக்க கூடாது என்று சென்னை அணி நிர்வாகத்திடம் தோனி கண்டிப்பாக கூறியுள்ளதாகவும் சென்னையில் உள்ள தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும் போது, ​​மற்றொரு வீரரை தோனி விரும்பவில்லை என ஒரு ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  இதையும் படிங்க: தென் ஆப்ரிக்கா டி20 லீக்: இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை பெற்ற Viacom18

  மேலும் இந்த முறை மினி ஏலத்தில் சென்னை அணியில் இருந்து இரண்டு வீரர்களை விடுவிக்க சென்னை அணி திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜார்டன், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மைல்ன் உள்ளிட்ட இரண்டு வீரர்களை சென்னை அணி இந்த மினி ஏலத்தில் விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் இந்த முடிவால் ஜடேஜா வேறு எந்த அணிக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீறி செல்ல முயன்றாலும் ஏற்கனவே கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் விளையாட தடை விதிக்கப்பட்டது போல், தற்போதும் தடை விதிக்கப்படலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Chennai Super Kings, CSK, IPL, MS Dhoni, Ravindra jadeja