பும்ராவின் தனித்தன்மை வாய்ந்த பந்துவீச்சை இழக்கிறோம் - சச்சின் டெண்டுல்கர்

பும்ராவின் தனித்தன்மை வாய்ந்த பந்துவீச்சை இழக்கிறோம் - சச்சின் டெண்டுல்கர்
சச்சின், பும்ரா
  • News18
  • Last Updated: October 2, 2019, 9:05 AM IST
  • Share this:
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், டெஸ்ட் தொடரில் பும்ரா இடம்பெறாதது, தென் ஆப்பிரிக்க அணி குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 , 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. இதன் முதலாவது போட்டி, விசாகப்பட்டினம் மைதானத்தில் காலை 9-30 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், ‘டெஸ்ட் போட்டிகளை பிரபலப்படுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மிகவும் உதவியாக இருக்கும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிபோட்டியில் மோதவுள்ளதால் அடுத்த 6 மாதத்தில் டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். முன்பெல்லாம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளை ஒரு அணி வென்று விட்டால் 3-வது போட்டிக்கான எதிர்பார்ப்பு குறைந்துவிடும். ஆனால் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரால் புள்ளிகளை பெற 3-வது போட்டியில் அணி வீரர்கள் போராடுவதால் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவரும்’ என்று கூறியுள்ளார்


மேலும் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, ரஹானே, புஜாரா, விராட் கோலி, விஹாரி உள்ளிட்ட சிறப்பான வீரர்கள் உள்ளதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த தொடர் சவாலாக இருக்கும். தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை வெற்றி இலக்காக வைக்க வேண்டும். அப்போது தான் அவர்களால் போட்டியை வெல்ல முடியும் என்று சச்சின் கூறியுள்ளார்.

இதேபோல் தென்னாப்பிரிக்க தொடரில் பும்ராவின் தனித்தன்மை வாய்ந்த பந்துவீச்சை இழக்கிறோம் என்பதிலும் ஐயமில்லை என்றும் பும்ரா இழப்பை ஈடுகட்டும் வகையில் போதுமான வலிமை இந்தியாவிடம் உள்ளது எனவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Also watch
First published: October 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading