காயத்திலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குணம் அடைந்தபோதும், அவரை இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பிசிசிஐ சேர்க்கவில்லை. இதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய அணியில் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளராக பும்ரா இருந்து வருகிறார். அணியின் நம்பர் ஒன் பவுலராக இவரைக் குறிப்பிடலாம். இந்திய அணியில் பேட்டிங் வரிசைக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வீரர்கள் பலர் உள்ளனர். அந்த அளவுக்கு பவுலிங்கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் குறைவாக உள்ளனர்.
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகியவை இந்தாண்டு நடைபெறவுள்ளதால் நல்ல தரமான வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்க பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின்போது, பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தொடரிலிருந்து விலகி சிகிச்சை பெற்று வந்தார். இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. இருப்பினும் அவர் நீண்ட காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதன் அடிப்படையில் காயம் முழு குணமடைய பும்ரா ஓய்வில் இருந்தார். இதையடுத்து அவர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திடீரென அவரை நீக்கி பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
‘ஸ்ரீநாத்திற்கு பின்னர் இவர்தான்’ – இளம் வேகப்பந்து வீச்சாளரை பாராட்டும் அஜய் ஜடேஜா
அதன்பின்னர் உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளன. இவற்றை கவனத்தில் கொண்டு பும்ராவுக்கு கூடுதல் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்பான்சர்கள், போட்டி ஒளிபரப்பு குறித்து முக்கிய முடிவு… பிசிசிஐ அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது…
இலங்கையுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் –
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Jasprit bumrah