ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஜஸ்பிரித் பும்ரா படைத்த புதிய சாதனை..

டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஜஸ்பிரித் பும்ரா படைத்த புதிய சாதனை..

Jasprit Bumrah

Jasprit Bumrah

வேகப்பந்து வீச்சாளரான பும்ரா 54 போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார். அவரின் சராசரி 19.85 ஆகவும், எகானமி 6.55 ஆகவும் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஸ்காட்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை மகுடத்தை பெற்றிருக்கிறார்.

அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெற்று வரும் 7வது உலக கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுடனான முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி, 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானையும், நேற்றைய 4வது போட்டியில் ஸ்காட்லாந்தையும் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

நேற்று ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அந்த அணியை 85 ரன்களுக்கு சுருட்டியதுடன், வெறும் 39 பந்துகளில் இலக்கை எட்டிப்பிடித்து அசத்தினர். நேற்றைய போட்டியில் கே.எல்.ராகுல் 19 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா, ஷமி தலா 3 விக்கெட்களும், பும்ரா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர்.

சாஹலை பின்னுக்குத்தள்ளினார் பும்ரா:

நேற்றைய போட்டியில் இரண்டு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் பும்ரா புதிய சாதனையை படைத்திருக்கிறார். இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக பும்ரா மாறியிருக்கிறார். யுஸ்வேந்திர சாஹலை பின்னுக்குத்தள்ளி அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

Also read: Ind vs Sco: ஸ்காட்லாந்து அணிக்கு அதிர்ச்சி தந்த ஜடேஜா, ஷமி கூட்டணி..

டி20 உலக கோப்பை தொடரில் இடம்பிடிக்க தவறிய லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் 49 போட்டிகளில் 63 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அவரின் சராசரி 25.30 ஆகவும், எகானமி 8.32 ஆகவும் உள்ளது.

அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா 54 போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார். அவரின் சராசரி 19.85 ஆகவும், எகானமி 6.55 ஆகவும் உள்ளது. இதே பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 3வது இடத்தில் உள்ளார். அஸ்வின் 48 போட்டிகளில் 55 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். அவரின் சராசரி 22.47 ஆகவும், எகானமி 6.90 ஆகவும் உள்ளது.

Also read: வாகன விபத்து இழப்பீடு கோரிக்கைகள் இனி 3 மாதங்களில் செட்டில் – வருடக்கணக்கில் காத்திருப்புக்கு முடிவு!

உலகின் டாப் வீரர்:

உலக அளவில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்னுடன் 19வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் பும்ரா.

டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் வரிசையில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 117 விக்கெட்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஷகிப் அல் ஹசன் 94 போட்டிகளில் ஆடியுள்ளார். அவருக்கு அடுத்ததாக 107 விக்கெட்களை வீழ்த்திய இலங்கையின் லசித் மலிங்காவும் 2வது இடத்தையும், நியூசிலாந்தின் டிம் சவுத்தி 104 விக்கெட்களுடன் (87 போட்டி) 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Jasprit bumrah, T20 World Cup, Team India