பும்ராவிற்கு ஓய்வு?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா வெல்ல பும்ராவின் பங்களிப்பு மிகவும் முக்கியம். சில முக்கியமான போட்டிகளில் மட்டும் பும்ராவை விளையாட வைக்க வேண்டும் - சேத்தன் சர்மா

பும்ராவிற்கு ஓய்வு?
பும்ரா
  • News18 Tamil
  • Last Updated: September 24, 2019, 4:38 PM IST
  • Share this:
யாக்கர் மன்னன் பும்ராவிற்கு சரியான நேரத்தில் ஓய்வு அளிக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சர்மா தெரிவுத்துள்ளார்.

உலகத் தரவரிசையில் நெ.1 பவுலராக இருப்பவர் பும்ரா. பும்ராவின் துல்லியமான பந்துவீச்சை முன்னாள் வீரர்கள் உட்பட அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். இந்தியா - தென்னாப்பிரிக்க டி20 போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இதையடுத்து தென்னாப்பிரிக்காவுடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பும்ரா பங்கேற்க உள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருவதால் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் பங்களிப்பு அதிகமாக தேவைப்படுகிறது. இதன்பின்னும் முக்கிய டெஸ்ட் தொடர்களில் பும்ரா விளையாட உள்ளார்.


சேத்தன் ஷர்மா


இந்நிலையில் டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து பங்கேற்கும் பும்ராவிற்கு உரிய நேரத்தில் ஓய்வு அளிக்க வேண்டுமென சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து பும்ராவிற்கு ஓய்வளிக்கலாம். பும்ராவின் திறமையை சொந்த மைதானத்தில் நிரூபிக்க தேவையில்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா வெல்ல பும்ராவின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், ஷமி, இஷாந் சர்மா ஆகியோர் சிறப்பான முறையில் பந்துவீசி வருகின்றனர். அனைத்து போட்டிகளிலும் பும்ராவிற்கு வாய்ப்பு வழங்காமல் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். சில முக்கியமான போட்டிகளில் மட்டும் பும்ராவை விளையாட வைக்க வேண்டும்“ என்றார்.

Loading...

Also Watch

First published: September 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...