Home /News /sports /

நாசர் ஹுசைன் கருத்திற்கு சற்றும் எதிர்பாராத பதிலை அளித்த பும்ரா

நாசர் ஹுசைன் கருத்திற்கு சற்றும் எதிர்பாராத பதிலை அளித்த பும்ரா

பும்ரா

பும்ரா

நேற்று பும்ரா முதல் ஒருநாள் போட்டியில் அட்டகாச ஸ்விங் பவுலிங்கில் 6 விக்கெட்டுகளை 19 ரன்களுக்கு வீழ்த்தி இங்கிலாந்தை 110 ரன்களுக்குச் சுருட்ட பிறகு ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா இலக்கை விக்கெட் இழக்காமலே விரட்டி 114/0 என்று அபார வெற்றி பெற்றது, இது தொடர்பாக பும்ரா உலகின் தலைசிறந்த அனைத்து வடிவ பவுலர் என்று நாசர் ஹுசைன் விதந்தோதினார், இதற்கு ஜஸ்பிரித் பும்ரா சற்றும் எதிர்பாராத ஒருபதிலை அளித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும் ...

    பும்ரா பந்து வீச்சையும் அவரது சில பந்துகளையும் பார்த்து பிரமித்துப் போன நாசர் ஹுசைன், “இன்றைய உலக கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று அனைத்திலும் சிறந்த பவுலராக இருக்கும் ஒரே பவுலர் பும்ரா தான், இந்த ஆட்டத்தில் அவரது ஆட்டம் கண்ணுக்கு விருந்து, உயர் தரம். சில பந்துகள் உண்மையில் ஆடவே முடியாத பந்துகள் ஆகும்” என்றார்.

    இவர் கூறியதை சச்சின் டெண்டுல்கரும் மறுக்கவில்லை. ஆனால் பும்ரா தன்னை கொஞ்சம் ஓவராக தூக்குவது கண்டு லேசாக வெட்கப்பட்டு என்னை அப்படியெல்லாம் புகழாதீங்க என்ற ரேஞ்சுக்கு இது குறித்து பதில் அளித்ததுதான் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

    “நல்ல நாளாக அமைந்தது. ஆனால் புகழ்ச்சியினால் அதிக மகிழ்ச்சியோ, அல்லது விமர்சனங்களால் அதிக வருத்தமோ நான் ஒரு போதும் அடைவதில்லை. நான் இந்த வடிவத்தில் சிறந்தவன் அந்த வடிவத்தில் சிறந்தவன் என்று என்னை பற்றி நான் ஒரு போதும் நினைத்ததில்லை.

    எல்லா வடிவ கிரிக்கெட்டையும் நான் நேசித்து ஆடுகிறேன். பாராட்டுதல்களுக்கும் கரகோஷங்களுக்கும் நன்றி. நான் இதை மதிக்கிறேன், ஆனால் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்று தன்னடக்கத்துடனும், ஸ்டாயிக்குகளின் (Stoics) தத்துவ நிலைப்பாடான இன்ப துன்ப நடுநிலை கொள்கையையும் வெளிப்படுத்தினார் பும்ரா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, India Vs England, Jasprit bumrah

    அடுத்த செய்தி