பிசிசிஐ-ன் அதிக சம்பளம் வாங்கும் வீரரில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பும்ரா முதலிடம்

பிசிசிஐ-ன் அதிக சம்பளம் வாங்கும் வீரரில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பும்ரா முதலிடம்

பும்ரா - விராட் கோலி

கேப்டன் விராட் கோலி 3 டெஸ்ட், 9 ஒரு நாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி ரூ.1.29 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

  • Share this:
    2020-ம் ஆண்டு பிசிசிஐ-ன் அதிக சம்பளம் வாங்கும் வீரரில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ரூ.1.38 கோடி பெற்று முதலிடத்தில் உள்ளார். கேப்டன் விராட் கோலி அடுத்த இடத்தில் இடத்தில் உள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஏ+ ஒப்பந்த ஊதியத்தில் இந்திய அணியில் விளையாடி வருகிறார். பும்ரா இந்த வருடம் 4 டெஸ்ட்(மெல்போர்ன் டெஸ்ட் போட்டியையும் சேர்த்து), 9 ஒரு நாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன்படி ஒரு ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் 15 லட்ச ரூபாயும், ஒரு நாள் போட்டி ஒன்றுக்கு 6 லட்ச ரூபாயும், டி20 போட்டிக்கு 3 லட்ச ரூபாயும் மொத்தம் ரூ.1.38 கோடி சம்பளமாக பெற்று உள்ளார்.

    கேப்டன் விராட் கோலி 3 டெஸ்ட், 9 ஒரு நாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி ரூ.1.29 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அவர் தற்போது மெல்போரினில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தால் முதலிடத்தை பெற்றிருப்பார்.

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 96 லட்ச ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். அவர் 2 டெஸ்ட் (மெல்போர்ன் டெஸ்ட் போட்டியையும் சேர்த்து), 9 ஒரு நாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் ஜடேஜா விளையாடவில்லை. அந்தப் போட்டிகளில் விளையாடி இருந்தால் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றிருப்பார்.

    இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா எதிர்பாராத விதமாக டாப் 5-ல் கூட இடம்பெறவில்லை. அவர் இந்த வருடம் 3 ஒரு நாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி 30 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published: