• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பந்தைக் கொடுங்கள் என்று கேட்டது ஏன் தெரியுமா?- பும்ரா மனம் திறப்பு

பந்தைக் கொடுங்கள் என்று கேட்டது ஏன் தெரியுமா?- பும்ரா மனம் திறப்பு

பும்ரா

பும்ரா

ஓவல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்குப் பிறகு தனது ரிவர்ஸ் ஸ்விங்கினால் திருப்பு முனை ஏற்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்த தாக்கம் ஏற்படுத்திய பும்ரா, கோலியிடம் சென்று பந்தை என்னிடம் கொடுங்கள் நான் வீசுகிறேன் என்று கூறியதன் காரணம் பற்றி மனம் திறந்துள்ளார்.

  • Share this:
    ஓவல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்குப் பிறகு தனது ரிவர்ஸ் ஸ்விங்கினால் திருப்பு முனை ஏற்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்த தாக்கம் ஏற்படுத்திய பும்ரா, கோலியிடம் சென்று பந்தை என்னிடம் கொடுங்கள் நான் வீசுகிறேன் என்று கூறியதன் காரணம் பற்றி மனம் திறந்துள்ளார்.

    பிட்சில் ஒன்றுமில்லை ஆனால் வறண்ட வானிலை, வறண்ட பிட்ச் ஆகியவற்றினால் ரிவர்ஸ் ஸ்விங் சாத்தியம் என்பதால் விராட் கோலியிடம் சென்று பந்தை தானே வாங்கிப் போட்டுள்ளார் பும்ரா, அதில் ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ குச்சிகளை தெறிக்கவிட இங்கிலாந்து பின்னடைவு கண்டு எழுந்திருக்கவேயில்லை. தான் கோலியிடம் பந்தைக் கொடுங்கள் என்று கேட்ட அந்தத் தருணம் பற்றி பும்ரா ஆட்டம் முடிந்தவுடன் மனம் திறந்தார்.

    “அவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தினால்தான் ஏதாவது செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன். மேலும் உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் முக்கியக் கட்டத்தில் இருந்தது. நன்றாகத் தொடங்கி அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தது. அதனால்தான் கோலியிடம் சென்று பந்தை என்னிடம் தருமாறு கேட்டேன். அதுதான் என் நோக்கம். கடைசியில் நல்ல முடிவு கிடைத்ததில் மகிழ்ச்சி.



     




    View this post on Instagram





     

    A post shared by Team India (@indiancricketteam)






    இந்த வெற்றியில் கடினமான உழைப்பை இட்டுள்ளோம். பவுலர்கள் பேட்டிங்கிலும் பங்களித்தனர். எனவே அவர்கள் குறித்து மிக்க மகிழ்ச்சி. அடுத்த போட்டிக்கான உத்வேகமும் நம்மிடம்தான் உள்ளது. உணவு இடைவேளைக்குப் பிறகு நன்றாகத் தொடங்கி போதிய நெருக்கடி கொடுத்தால் ரிசல்ட் சாத்தியமே என்று நம்பினேன். ரன்களை கொடுத்தால் உத்வேகம் போய்விடும் நம் மீது நாமே அழுத்தம் செலுத்திக் கொள்வதாகி விடும். நான் இந்த மனநிலையில்தான் இருந்தேன், எனவே அவர்கள் மீது நெருக்கடியை திருப்பி விட வேண்டும்” என்றார் பும்ரா.



     




    View this post on Instagram





     

    A post shared by Team India (@indiancricketteam)






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: