தமிழகத்தை பூர்விகமாக கொண்ட சஞ்சனா கணேசனை திருமணம் முடித்தார் பும்ரா

பும்ரா திருமணம்

சஞ்சனா கணேசனின் பூர்வீகம் தமிழகம் தான். இவரின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்.

 • Share this:
  இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்புக்கேட்டு விலகினார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. பும்ராவிற்கு திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன் காரணமாகவே அவர் விடுப்பில் சென்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் திருமணம் குறித்து வெளியான எந்த தகவலுக்கும் பும்ரா பதிலளிக்காமல் இருந்தார்.

  இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை பும்ரா இன்று திருமணம் செய்துள்ளார். சஞ்சனா கணேசனின் பூர்வீகம் தமிழகம் தான். இவரின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். ஆனால், தற்போது இருப்பது எல்லாம் மகாராஷ்டிராவின் புனேவில் தான் உள்ளார்கள்.  பும்ரா தனது திருமண புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், நாங்கள் இருவரும் புதிய பயணத்தை தொடங்கியுள்ளோம். இன்று எங்களுக்கு மகிழ்ச்சியான நாள் எங்களுடைய திருமணம் மற்றும் மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம் என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: