ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகல் - தகவல்

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகல் - தகவல்

பும்ரா

பும்ரா

Jasprit Bumrah | டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகல் என தகவல் வெளியாகி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரலேியாவில் அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது. சூப்பர் 12 போட்டிக்கு தகுதி பெற குரூப் போட்டிகள் முதலில் தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேச அணிகள் நேரடியாக சூப்பர் 12 தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

  டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது அக்டோபர் 23-ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்து கடும் விமர்சனத்தை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி வரும் டி20 உலகக்கோப்பையில் வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கினற்னர்.

  Also Read : சுரேஷ் ரெய்னா பிடித்த அற்புதமான கேட்ச்.. இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

  இந்நிலையில் டி20 உலகக்கோப்பை 2022 தொடரிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகல் என பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. பும்ரா முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடமால் இருந்தார். இந்நிலையில் காயம் குணமடைய சில மாதங்கள் ஆகும் என்பதால் அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக காத்திருப்பு வீரர்களான முகமது ஷமி அல்லது தீபக் சாஹர் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Jasprit bumrah, T20 World Cup