ஓ இது தான் அந்த தனிப்பட்ட காரணமா..! பும்ரா விலகியதற்கான காரணம்..?

India vs England

பும்ராவிற்கு பிசிசிஐ விடுப்பு கொடுத்த நிலையில் வேறு எந்த வீரரையும் அவருக்கு மாற்றாக அறிவிக்கவில்லை.

 • Share this:
  இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு கேட்டுள்ள பும்ராவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அகமாதபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

  இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக 4-வது டெஸட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பிசிசிஐ-யிடம் விடுப்பு கேட்டிருந்தார். பும்ராவிற்கு பிசிசிஐ விடுப்பு கொடுத்த நிலையில் வேறு எந்த வீரரையும் அவருக்கு மாற்றாக அறிவிக்கவில்லை. முகமது சிராஜ் 4-வது டெஸ்டில் பும்ராவிற்கு பதிலாக இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதனிடையே பும்ராவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஐ.பி.எல் 2021 தொடருக்கு முன் பும்ராவிற்கு திருமணத்தை முடிக்க அவரது வீட்டில் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஏற்கனவே ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் ஒரு நாள் தொடரிலும் அவர் விளையாடமாட்டா் என்றும் கூறப்படுகிறது.
  Published by:Vijay R
  First published: