உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதி சுற்றுக்குள் தகுதி பெறும் வாய்ப்பை தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இழந்துள்ள நிலையில், மற்ற அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி அடுத்து வரும் 3 போட்டிகளில் பலம் வாய்ந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில் நாளை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாசன் ராய் விளையாடமாட்டார் என அறிவித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஜோசன் ராய் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடமால் ஓய்வில் இருந்தார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் முழுவதும் குணமடையாததால் அவர் விலகி உள்ளார். பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள சிறப்பான தொடக்கம் தேவைப்படும் நிலையில் அவர் விலகி உள்ளது இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்தியாவிற்கு எதிராக ஜூன் 30-ம் தேதி நடக்க உள்ள போட்டியில் ஜோசன் ராய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Watch
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.