ENG vs WI | ஹோல்டர் பந்துவீச்சில் சரணடைந்தது இங்கிலாந்து அணி..

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 204 ரன்கள் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்துள்ளது.

ENG vs WI | ஹோல்டர் பந்துவீச்சில் சரணடைந்தது இங்கிலாந்து அணி..
ஜாசன் ஹோல்டர்
  • Share this:
கொரோனோ வைரஸை வென்றதன் அடையாளமாக கிரிக்கெட் உலகில் சர்வதேச போட்டிகள் தொடங்கியுள்ளன. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் சர்வதேச டெஸ்ட் போட்டி சௌத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் போட்டியில் மழை குறுக்கிட்டதால் 17 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஹோல்டர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். கேப்ரியல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.



இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நிதானமாக விளையாடி வருகின்றனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் சேர்த்துள்ளனர். பிராத்வெய்ட் 23 ரன்களுடனும், ஹோப் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading