ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

காஷ்மீரின் முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜசியா அக்தர்; யார் இவர்?

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் உள்ள குழப்பமான சூழலால் தனது கனவை நோக்கிப் பயணிக்க 2011-ம் ஆண்டு முதல் பஞ்சாப் கிரிக்கெட் அணியில் ஜசியா அக்தர் விளையாடி வந்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

காஷ்மீர் மாநிலம் ஷோபியன் பகுதியைச் சேர்ந்த ஜசியா அக்தர் மகளிர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்காகத் தேர்வாகியுள்ளார்.

விரைவில் தொடங்கவுள்ள மகளிர் டி20 ஐ.பி.எல் போட்டிகளுக்கான முன்னோட்ட போட்டிகள் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதில் மே 6-ம் தேதி ஜெய்பூர் ஜவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாட ஜசியா அக்தர்  என்பவர் தேர்வாகியுள்ளர். இவர் காஷ்மீரின் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஆவார்.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் உள்ள குழப்பமான சூழலால் தனது கனவை நோக்கிப் பயணிக்க 2011-ம் ஆண்டு முதல் பஞ்சாப் கிரிக்கெட் அணியில் ஜசியா அக்தர் விளையாடி வந்தார்.

இந்நிலையில் ஜசியா அக்தருக்கு மகளிர் ஐ.பி.எல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பிற ஜம்மு காஷ்மீர் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்.

விரைவில் இவருக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க:

Published by:Tamilarasu J
First published:

Tags: Woman