Home /News /sports /

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு தடை!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு தடை!

Australia Bowler James Pattinson | விக்டோரியா அணியில் விளையாடிய பட்டின்சன் போட்டியின் போது எதிரணியைச் சேர்ந்த வீரரை அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் 2-0 என ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தொடரை இழந்தது.

இதையடுத்து இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் ஒரு பகுதி என்பதால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்துக்கு எதிராக நடந்த ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில் விக்டோரியா அணியில் விளையாடிய பேட்டின்சன், எதிரணியைச் சேர்ந்த வீரரை அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டின்சன் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. கடந்த 18 மாதங்களில் மூன்றாவது முறையாக நடத்தை விதிமுறைகளை மீறியதால் பேட்டின்சன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Aus vs Pak

அடுத்த செய்தி