கோலி என்ன பெருசு? நான் பார்க்காத கேப்டன்களா, வீரர்களா : கிளறும் ஜேம்ஸ் ஆண்டர்சன்

கோலி-ஆண்டர்சன்.

கடந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா தனக்கு பவுன்சர் மழை பொழிந்ததையும் அப்போது கோலி தன்னிடம் வந்து என்ன கூறினார் என்பதையும் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தார் இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

 • Share this:
  கடந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா தனக்கு பவுன்சர் மழை பொழிந்ததையும் அப்போது கோலி தன்னிடம் வந்து என்ன கூறினார் என்பதையும் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தார் இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

  தனி மனித ஈகோவினால் இங்கிலாந்து கடந்த டெஸ்ட் போட்டியை இழந்தது, இதே தனி மனித ஈகோதான் கோலிக்கும் உள்ளது, கோலிக்கு இதனால் பேட்டிங்கில் பாடம் எடுத்து வருகின்றனர், கேப்டனாக கோலிக்கும் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படும். ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் சொல்வது அதுவல்ல, தன் வாழ்நாளில் எத்தனையோ கேப்டன்கள், வீரர்கள், கோலியைவிடவும் போட்டித்திமிர் பிடித்த ஆட்களை தான் பார்த்திருக்கிறேன் என்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

  டெலிகிராப் பத்திரிகையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:

  பும்ரா வீசிய அந்த 10 பந்து ஓவரின் நடுவரில் கோலி என்னைடம் வந்து என்ன இது உங்களுக்குப் பிடிக்காதே, உங்களுக்கு இது மகிழ்ச்சியளிக்காதே என்று பவுன்சர்களைப் பற்றி கேட்டார்.

  ஆம்! கோலி சரியாகத்தான் சொன்னார், நான் அவருக்குப் பதில் அளித்தேன், உண்மையில் எனக்கு இந்த ஷார்ட் பிட்ச் பவுலிங் பிடிக்காது. நான் நிறைய பவுன்சர்களைச் சந்தித்திருக்கிறேன், எனக்கு பவுன்சரை ஆட வராது என்பது ஒன்றும் உலக மகா ரகசியமல்ல. மிட்செல் ஜான்சன் பெர்த் பிட்சில் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து வீசியதை விடவா இது பெரியது?

  இதையும் படிங்க: India vs England, 3rd test: கடுப்பான விராட் கோலி- என்னிடம் இப்படிக் கேட்கலாமா?

  ஜோ ரூட் என்னிடம் வந்து பிட்ச் ஸ்லோவாக உள்ளது பவுன்சர்களை எளிதில் பார்க்கலாம் என்றார். ஆனால் பும்ரா வீசிய முதல் பந்து கண்களுக்குத் தெரியவில்லை. ஹெல்மெட்டில் அடித்த போதுதான் தெரிந்தது. பும்ரா எனக்காக வேண்டி வேகத்தைக் கூட்டியுள்ளார். ஜோ ரூட்டுக்காக கிரீசில் நிற்க முடிவெடுத்தேன்.

  எனக்கு இத்தகைய போர்த் தந்திரங்கள் பிடிக்கும், அது என்னை ஆட்டத்தில் கவனமேற்கொள்ள பணிக்கும். நான் மேலும் சிறப்பாகவே இதனால் ஆடுவேன். ஆனால் இப்போது உள்ள அணி 2010-11-ல் உள்ளது போல் பவர் பேக்டு அணியல்ல. அப்போது அந்த அணி கொஞ்சம் வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுப்பார்கள்.

  ஆனால் இப்போது எங்கள் கிரிக்கெட்டை வேறு விதத்தில் ஆடி வருகிறோம். எனவே களத்தில் நான் இதை நினைவில் கொள்ள வேண்டும், ஒரு வீரர் இன்னொரு வீரருடன் மோதுவது விஷயமே அல்ல.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கிரிக்கெட்டில் பல கேரக்டர்களைச் சந்தித்திருக்கிறேன். கோலியைவிடவும் போட்டி மனப்பான்மையுடன் ஆக்ரோஷமாக ஆடும் வீரர்கள் ஏராளமானோரைச் சந்தித்திருகிறேன். நான் அவர்களை எளிதில் கையாண்டுமிருக்கிறேன். இப்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதுதான் முக்கியம் இது போன்ற சத்தங்களுக்கு காது கொடுக்கக் கூடாது.

  இவ்வாறு கூறினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
  Published by:Muthukumar
  First published: