• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 1,000 விக்கெட்டுகளுக்கு இன்னும் 8 விக்கெட்டுகள்தான் பாக்கி: ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனைத் துளிகள்

1,000 விக்கெட்டுகளுக்கு இன்னும் 8 விக்கெட்டுகள்தான் பாக்கி: ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனைத் துளிகள்

ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இங்கிலாந்தின், உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னும் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் முதல் தர கிரிக்கெட்டில் 1000 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2வது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

  • Share this:
இவருக்கு முன்னதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ கேடிக் 2005-ல் முதல்தரக் கிரிக்கெட்டில் 1000 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜூன் 2ம் தேதியான நாளை நியூசிலாந்துக்கு எதிராக லார்ட்சில் முதல் டெஸ்ட் தொடங்குகிறது. இதில் ஸ்விங் கிங் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த மைல்கல்லை எட்டுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.



இன்று மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளராக திகழும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு காலத்தில் ஜாகீர் கானிடமிருந்து எப்படி பேட்ஸ்மென்களை ஒர்க் அவுட் செய்து அவுட் ஆக்குவது என்பதை கற்றுக் கொண்டேன் என்றார். இப்போது கூறுவாரா என்பது தெரியாது.

Read More:  நாளை இங்கிலாந்து-நியூசிலாந்து முதல் டெஸ்ட்: இங்கிலாந்து ஆதிக்கம் உடையுமா?- 10 சுவாரஸ்யப் புள்ளி விவரங்கள்
 ஒரு ஓவர் முழுக்க அவுட்ஸ்விங்கர் போட்டு பிறகு திடீரென ஒரு இன்ஸ்விங்கரைப் போட்டு எல்.பி. ஆக்குவதும், இன்ஸ்விங்கராகப் போட்டு விட்டு பிறகு ஒரு பந்தை அதே லெந்த்தில் லேட்டாக அவுட் ஸ்விங் செய்து வீழ்த்துவதும் ஆண்டர்சனின் கைவந்த கலை.

வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான். இவர் 160 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். சராசரி மிகப்பிரமாதமான 26.46 ஆகும். 30 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

3 முறை ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 259 போட்டிகளில் 992 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார். இதோடு சேர்த்து 50 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் 6 முறை ஒரே டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் ஆண்டர்சன்.

Read More: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: மாஸ்டர் கிளாஸ் பெடரர்- இஷ்டமில்லாமல் ஆடிய இஸ்டமின்?
 2020ம் ஆண்டு முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் 37 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இலங்கைக்கு எதிராக கால்லேயில் ரிவர்ஸ் ஸ்விங்கில் இலங்கையை காலி செய்த போது 40 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தியாவில் சென்னையில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இதே ரிவர்ஸ் ஸ்விங்கில் கைப்பற்றினார்.

 

39 வயதில் 135 கிமீ வேகம் வீசக்கூடியவராக இன்னும் ஆண்டர்சன் திகழ்வது அவரது ஃபிட்னெஸ் பற்றிய விஷயத்தை நமக்கு அறிவுறுத்துவதாக உள்ளது. இந்த லெஜண்ட் இன்னும் 8 விக்கெட்டுகளை வீழ்த்த வாழ்த்துவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: