இன்று 1,000 விக். சாதனையாளர்.. அன்று அவரது முதல் டெஸ்ட் முதல் ஓவரில்.. ஆண்டர்சனை சாத்திய ஜிம்பாப்வே வீரர் யார் தெரியுமா?

ஆண்டர்சன் - பிராட்.

இன்று நம்பர் 1 பவுலராக இருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் அன்று தன் அறிமுக டெஸ்ட் போட்டியை எடுத்துக் கொண்டால் அதுவும் அவர் வீசிய முதல் ஓவரில் ஜிம்பாப்வே வீரர் இவரை அடித்து நொறுக்கி 17 ரன்கள விளாசியதை யாரும் அறிவார்களா? ஆனால் ஆண்டர்சனின் ஆரம்பம் இதுதான்.

  • Share this:
இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்று உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர், 617 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் என்ற வியக்க வைக்கும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

லங்காஷயருக்காக ஆடி கடுமையான ஸ்விங் பவுலிங்கில் 19 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 1000 விக்கெட்டுகளை தன் ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் கைப்பற்றியுள்ளார், மேன் மேலும் செல்வார் போல்தான் தெரிகிறது.

பொதுவாக ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக் கூடாது என்பார்கள், ஏனெனில் பிரம்மாண்ட புனித நதியின் தொடக்க இடத்தைப் பார்த்தால் சிறு ஓடையாகவோ, வாய்க்காலாகவோ கூட இருக்கலாம். அதே போல் பெரிய ரிஷியின் பூர்வாசிரம வாழ்க்கையில் அவர் பெரிய தப்புகளை, குற்றங்களை செய்தவராக கூட இருக்கலாம் எனவேதான் ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக் கூடாது என்பது நம் பண்பாட்டில் புழங்கும் ஒரு கதையாடல் ஆகும்.

Also Read: James Anderson 1000 | 19 ரன்களுக்கு 7 விக்கெட்; ஜேம்ஸ் ஆண்டர்சன் உலக சாதனை! ஆட முடியாத பந்தை வீசி 1000 விக். மைல்கல்!  (வீடியோ)

அதேபோல் இன்று நம்பர் 1 பவுலராக இருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் அன்று தன் அறிமுக டெஸ்ட் போட்டியை எடுத்துக் கொண்டால் அதுவும் அவர் வீசிய முதல் ஓவரில் ஜிம்பாப்வே வீரர் இவரை அடித்து நொறுக்கி 17 ரன்கள விளாசியதை யாரும் அறிவார்களா? ஆனால் ஆண்டர்சனின் ஆரம்பம் இதுதான்.

2003ம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அறிமுகமாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தன் முதல் ஓவரில் 17 ரன்கள் விளாசப்பட்டார், விளாசியது ஜிம்பாப்வே வீரர் டியான் இப்ராகிம். 3 பவுண்டரிகள் ஒரு 3 ரன்களோடு 2 நோபால்களை வீசினார் ஆண்டர்சன், மொத்தம் 17 ரன்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடனே ஆண்டர்சனை எடைபோட்டு விட வேண்டாம், அதே இன்னிங்சில் 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஜிம்பாப்வேயை 147 ரன்களுக்குச் சுருட்டினார். இங்கிலாந்து 92 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி கண்டது.

இதே போல் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் பேட்டர்சன் நியூசிலாந்துக்கு எதிராக 1995-96 தொடரில் தன் அறிமுக டெஸ்ட்டின் முதல் ஓவரில் நியூசி.யின் நேதன் ஆஸ்ட்ல் 4 பவுண்டரிகளை விளாச ஒரு நோபால் என்று 17 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

அதே போல் வங்கதேச ஸ்பின்னர் சோகாக் காஜி தன் அறிமுக டெஸ்ட் முதல் ஓவரில் 18 ரன்களை விட்டுக் கொடுத்தார் இவர் சிக்கியது கிறிஸ் கெய்லிடம்.
Published by:Muthukumar
First published: