இது எப்புடி இருக்கு... ஜிம் வேண்டாம்... புதிய ஐடியாவை கையில் எடுத்த பிரபல கிரிக்கெட் வீரர் - வீடியோ

இது எப்புடி இருக்கு... ஜிம் வேண்டாம்... புதிய ஐடியாவை கையில் எடுத்த பிரபல கிரிக்கெட் வீரர் - வீடியோ
  • Share this:
கொரோனா வைரஸ் அச்சத்தால் ஜிம்முக்கு போக முடியாததால் புதிய ஐடியாவை கையில் எடுத்துள்ளார் இங்கிலாந்து பிரபல வீரர் ஜேம்ஸ் ஆன்டர்சன்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் ஓய்வில் இருந்தாலும் உடலை கட்டுகோப்பாக வைக்க தினமும் ஜிம் போவது வழக்கம். ஆனால் கொரோனா தாக்கத்தால் ஜிம் உள்ளிட்டவைகளும் மூடப்பட்டுள்ளது.

ஜிம் மூடி இருந்தாலும் உடற்பயிற்சியை வீட்டிலேயே தொடங்கி உள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆன்டர்சன். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட வீடியோவில் தனது மகளை வெயிட் லிப்டிங் தூக்குவது போல் தூக்கி பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். வீட்டிலேயே பயிற்சி எடுக்க பெண்கள் மிகவும் உதவியாக இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்து அணி இலங்கை அணியுடனான டெஸ்ட் கிரி்க்கெட் தொடரை ரத்து செய்துள்ளது. மேலும் ஐ.பி.எல் உள்ளிட்ட தொடர்களிலும் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க வேண்டாம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜேம்ஸ் ஆன்டர்சன் 151 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 584 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த ஆன்டர்சன் இன்னும் முழுவதுமாக குணமடையவில்லை என்பது குறிப்பிடதக்கது.
First published: March 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்