• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஆன்டர்சன் அபாரம்... 70 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சாதனை

ஆன்டர்சன் அபாரம்... 70 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சாதனை

ஆன்டர்சன்

ஆன்டர்சன்

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆன்டர்சன் இதுவரை 7 முறை 5 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.

  • Last Updated :
  • Share this:
    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்களை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் 70 ஆண்டுகளுக்கு பின் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆன்டர்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளில் கிரிக்கெட் அதிக வயதில் 5 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட்டில் 1951-க்கு பிறகு அதிக வயதில் பந்துவீச்சாளர் 5 விக்கெட்களை வீழ்த்தியருப்பது தற்போது தான். உலகளவில் 1932-ம் வருடம் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பெர்ட் அயன்மாங்கர் 49 வயதில் 5 விக்கெட்கள் வீழ்த்தியது சாதனையாக இருந்து வருகிறது.

    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆன்டர்சன் இதுவரை 7 முறை 5 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இங்கிலாந்து முன்னாள் வேப்பந்து வீசசாளர் ஐயன் போத்தாம் லார்ட்ஸ் மைதானத்தில் 8 முறை 5 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

    உலகளவில் ஒரு மைதானத்தில் 5 விக்கெட்களை அதிக முறை வீழ்த்தியவர்களில் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் கொழும்பு மைதானத்தில் மட்டும் 14 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் அதிகபட்சமாகும்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆன்டர்ஸன் 31-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 விக்கெட்டுகளை அதிகளவு வீழ்த்தியதில் உலகளவில் –6-வது பந்துவீச்சாளராகவும் ஆன்டர்ஸன் உள்ளார்.

    இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 30 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், ஆன்டர்ஸன் 31-வது முறையாக வீழ்த்தி அஸ்வினின் சாதனையை முறியடித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: