உலகின் மூன்றாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ராஜஸ்தானில்...!

ராஜஸ்தான் மாநிலத்தில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ராஜஸ்தானில்...!
  • Share this:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏற்கனவே சவாய் மான்சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. இந்த நிலையில் அங்கு புதியதாக கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று ரூ.350 கோடி செலவில் கட்டப்பட இருப்பதாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் மகேந்திர சர்மா கூறுகையில், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த மைதானம் அமைய உள்ளது. இந்த மைதானத்தில் 75,000 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உருவாக்கப்படுகிறது.

இந்த மைதானத்தில் கட்டுமானம் 2 பகுதிகளாக நடைபெற உள்ளது. முதலில் 45 ஆயிரம் இருக்கைகள் கொண்ட பகுதியும், 2-வது கட்டமாக 30 ஆயிரம் பேர் அமரும் இருக்கைகள் கொண்ட பகுதியும் கட்டப்பட உள்ளது.

படிக்க: சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்வு - என்னென்ன இயங்கும்...?

படிக்க: சீன அதிபருக்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்
ரஞ்சி கோப்பை போட்டிகளுக்கு பயன்படுத்தக்கூடிய இரண்டு பயிற்சி மைதானங்கள் மற்றும் இரண்டு உணவகங்கள், வீரர்களுக்கான 30 பயிற்சி வலைகள், 250 பேர் அமரக்கூடிய பத்திரிகையாளர்கள் சந்திப்பு அறை, 4 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளிட்டவை இடம் பெறும்.

இதன் கட்டுமான பணிகள் அடுத்த 4 மாதங்களுக்குள் துவங்கும் என்றும் தெரிவித்தார்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading