நாம் முதலில் இந்தியர்கள்:  ‘சாதிப்பெருமை’ பேசியதாக ஜடேஜா மீது சாட்டையைச் சுழற்றும் நெட்டிசன்கள்

ஜடேஜா

ரெய்னா நான் ஒரு பிராமின் என்று கூறியதையடுத்து அவரது ‘சாதி வெறி’யைச் சாடிய நெட்டிசன்கள் தற்போது ஜடேஜாவை நோக்கி அம்புகளை எய்து வருகின்றனர்.

 • Share this:
  சிறிது நாட்களுக்கு முன்பு ‘நான் ஒரு பிராமின்’ என்று சிஎஸ்கேவின் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா கூறி நெட்டிசன்களிடம் வறுபட தற்போது ‘நான் எப்பவும் ஒரு ராஜ்புத்’ என்று கூறி ரவீந்திர ஜடேஜா நெட்சின்களிடம் சிக்கி வறுபட்டு வருகிறார்.

  'I'm Rajput Boy forever' என்று ரவீந்திர ஜடேஜா ட்வீட் செய்ய, இது போதாதா என்று கிளம்பி அவரை கொசுவைப் போல் கடித்துக் குதறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

  #RAJPUTBOY FOREVER. Jai hind என்று அவர் ட்வீட் செய்தாலும் செய்தார், ஏண்டா அப்படிச் சொன்னோம் எனும் அளவுக்கு வலைவாசிகள் அவரை பிய்த்து எடுக்கின்றனர்.

  ரெய்னா நான் ஒரு பிராமின் என்று கூறியதையடுத்து அவரது ‘சாதி வெறி’யைச் சாடிய நெட்டிசன்கள் தற்போது ஜடேஜாவை நோக்கி,

  “லட்சக்கணக்கானோருக்கு நீங்கள் ஒரு உத்வேகம், ஆனால் உங்களிடமிருந்து இப்படி எதிர்பார்க்கவில்லை. சாதி, மதம், நிறம் ஒரு விவகாரமே அல்ல. ஆனால் நீங்கள் எதுவாக இருந்தாலும் உங்களை நேசிப்போம் என்ற தொனியில் சாத்து வாங்கி வருகிறார்.

  உங்கள் வாசிப்புக்காக: Tokyo | Bhavani Devi | 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி உறுதி

  இன்னொரு நெட்டிசன், ஒரு கிரிக்கெட் வீரராக இருந்து கொண்டு இப்படிச் செய்யலாமா, இப்படி சாதியை பற்றி அப்பட்டமாக பெருமை பேசலாமா? நாமெல்லாம் முதலிலும் கடைசியிலும் இந்தியர்கள் என்று இன்னொருவர் சாட்டையைச் சொடுக்கியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிறப்பால் எந்த பெருமையும் வருவதில்லை, அப்படிப் பிறப்பால் உன் பெருமையை பேசினால் அது நோய்க்கூறு என்கிறார் இன்னொரு நெட்டிசன்.

  நீங்கள் என்னவாக ஆகியிருக்கிறீர்கள் என்பதில் பெருமையடையுங்கள், உங்கள் மீது திணிக்கப்பட்ட அடையாளங்களில் பெருமை வேண்டாம் என்று இன்னொரு விளாசல் ஜடேஜாவுக்கு விழுந்துள்ளது.

  வீரர்கள், நட்சத்திரங்கள், பிரபலங்கள் இப்படி வாயைவிட்டு அல்லது  பதிவிட்டு நெட்டிசன்களிடம் மாட்டிக் கொள்வது வழக்கமாகி வருகிறது.
  Published by:Muthukumar
  First published: